உலகமே வியக்கும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வருகிற ஏப்ரல் மாதம் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, வருகின்ற டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. 


இந்த மினி ஏலமானது டிசம்பர் 23ம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 2.30. தொடங்க உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் 405 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றாலும், 10 அணிகளின் கவனமும் தற்போது ஆப்கானிஸ்தானை சேர்ந்த 15 வயது சுழற்பந்து வீச்சாளர் அல்லா முகமது கசன்ஃபர் மீது உள்ளது.  இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலத்தில் அல்லா முகமது கசன்ஃபர் பதிவு செய்துள்ளார்.


இதன் மூலம், இந்த ஆண்டு மினி ஏலத்தில் பதிவு செய்யப்பட்ட மிக குறைந்த வயதுடைய இளம் வீரர் என்ற பெருமையை அல்லா முகமது கசன்ஃபர் பெற்றுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கிலும் தனது பெயரை பதிவு செய்தபோதும், எந்த ஒரு அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இருப்பினும், தற்போது இந்திய பீரிமியர் லீக்கில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். 


அல்லா முகமது கசன்ஃபரின் விருப்பமான வீரர்: 


முகமது மிகவும் திறமையான ஃபிங்கர் ஸ்பின்னர். இந்தியன் பீரிமியர் லீக்கில் இவரது அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய். 


இந்தநிலையில், இவருக்கு இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் விருப்பமான பந்துவீச்சாளராக கருதுகிறார்.  ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் பதிவு செய்த பிறகு காபூலில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த முகமது, “ரவிச்சந்திரன் அஷ்வின் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்தான் எனக்கு விருப்பமான பந்து வீச்சாளர். அவரது பன்முகத்தன்மையை நான் விரும்புகிறேன். நான் எப்போதும் அவரை எனது உத்வேகமாக கருதுகிறேன்” என்று தெரிவித்தார். 


அதேபோல், அமித் மிஸ்ரா தனது 40 வயதில் தனது பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா ஐபிஎல் 2023 ஏலப் பட்டியலில் அதிக வயதுடைய வீரராக பதிவு செய்துள்ளார். 


மினி ஏலம் முழு விவரம்:


ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களின் அடிப்படை விலை விவரம் வெளியாகியுள்ளது. முக்கிய வீரர்களின் அடிப்படை விலையை கீழே காணலாம்.



  1. மயங்க் அகர்வால்      – 1 கோடி ரூபாய்

  2. அஜிங்க்யா ரகானே   – 1.5 கோடி ரூபாய்

  3. ரைலி ரோசாவ்             - 2 கோடி ரூபாய்

  4. கனே வில்லியம்சன்   – 2 கோடி ரூபாய்

  5. சாம் கரன்                  - 2 கோடி ரூபாய்

  6. கேமரூன் கிரீன்          - 2 கோடி ரூபாய்

  7. ஷகிப் அல் ஹசன்    - 1.5 கோடி ரூபாய்

  8. ஜேசன் ஹோல்டர்    - 2 கோடி ரூபாய்

  9. பென் ஸ்டோக்ஸ்     - 2 கோடி ரூபாய்

  10. டாம் பான்டன்         - 2 கோடி ரூபாய்

  11. ஹென்ரிக் கிளாசென் – 1 கோடி ரூபாய்

  12. நிகோலஸ் பூரன்       - 2 கோடி  ரூபாய்

  13. பில் சால்ட்                 - 2 கோடி ரூபாய்

  14. கிறிஸ் ஜோர்டன்     - 2 கோடி ரூபாய்

  15. ஆடம் மில்னே          - 2 கோடி ரூபாய்

  16. அடில் ரஷீத்               - 2 கோடி ரூபாய்

  17. ட்ராவிஸ் ஹெட்       - 2 கோடி ரூபாய்

  18. டேவிட் மலான்        - 1.5 கோடி ரூபாய்

  19. மணீஷ் பாண்டே  - 1 கோடி ரூபாய்

  20. ஜிம்மி நீஷம்          - 2 கோடி ரூபாய்

  21. பிரண்டன் கிங்     - 2 கோடி ரூபாய்


உள்பட பல வீரர்கள் அடிப்படை விலை 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக ரூபாய் 20 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில வீரர்களுக்கு ரூபாய் 1.50 கோடியும், சில வீரர்களுக்கு ரூபாய் 1 கோடியும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.