ஐபிஎல் தொடரின் 69வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 


5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆஃப்பை உறுதி செய்ய முயற்சிக்கும். மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே பிளே ஆஃப் பந்தயத்தில் இருந்து விலகிய நிலையில், இன்று தனது கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. வான்கடே மைதானத்தில் மும்பை அணி 6 லீக் போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் உள்ளது. எனவே, பார்மை தொடர முயற்சிக்கும். 


பேட்டிங்கை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் மற்றும் நேஹால் வதேரா நல்ல பார்மில் உள்ளனர். ஆனால், பந்துவீச்சாளர்களில் நிலைமையே கவலை அளிக்கிறது. அதை சரி செய்தால் பிளே ஆஃப் கனவு பலிக்கும். 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடவில்லை. தற்போது ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எனவே வெற்றிபெற்று 9வது இடத்திலாவது முன்னேற முயற்சிக்கும். ஹைதராபாத் அணியின் விளையாடும் லெவன் அணியில் இருந்து உம்ரான் மாலிக்கை நீக்கியது ஏற்கனவே சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எனவே இன்றைய கடைசி லீக் போட்டியில் மாலிக்கை ஹைதராபாத் அணி முயற்சிக்கலாம். 


MI vs SRH போட்டி விவரங்கள்:



  • மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி: 69

  • இடம்: வான்கடே ஸ்டேடியம், மும்பை

  • தேதி & நேரம்: ஞாயிறு, மே 21, பிற்பகல் 3:30 மணி

  • டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா


வான்கடே ஸ்டேடியம் பிட்ச் அறிக்கை: 


வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது. சேஸிங் செய்ய சிறந்த பிட்ச். 190க்கு மேல் இந்த ஸ்டேடியத்தில் எடுத்தால் நல்ல ஸ்கோராக இருக்கும். 


கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்: 


மும்பை இந்தியன்ஸ் (MI):


ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, டிம் டேவிட், ஹிருத்திக் ஷோக்கீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH):


அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், கார்த்திக் தியாகி, மயங்க் டாகர், புவனேஷ்வர் குமார், நிதிஷ் ரெட்டி


யார் சிறந்து விளங்குவார்கள்..?


ஹென்ரிச் கிளாசென்:


தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென் தற்போதைய சீசனில் அபார பார்மில் உள்ளார். கடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தினார். இவர் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 430 ரன்கள் குவித்துள்ளார். மேலும், ஐபிஎல் ஆரஞ்சு கேப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் தனது பார்மை மீண்டும் தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம். 


பியூஸ் சாவ்லா: 


மும்பை அணியின் பியூஸ் சாவ்லா இந்த சீசனில் கலக்கி வருகிறார். இவர் இதுவரை 13 போட்டிகளில் 20 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்று ஆபத்தான வீரராக வலம் வரலாம். 


இன்றைய போட்டி கணிப்பு : மும்பை அணி வெற்றிபெறும்.