ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய நிலையில், 70 சதவீத போட்டிகள் முடிவடைந்து விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. குஜராத் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது பெரும்பாலும் உறுதியாகிவிட்ட நிலையில், மற்ற 3 அணிகள் யார் என்பது இன்னும் இழுபறியாகவே உள்ளது. அந்த இடங்களுக்காக மீதமுள்ள 9 அணிகளுமே கடுமையாக போராடி வருகின்றன.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று களமிறங்குகியுள்ளது. அதேநேரம், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்பதால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளேயிங் லெவன்
ரோஹித் ஷர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
மும்பை இந்தியன்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
ராமன்தீப் சிங் , டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விஷ்ணு வினோத், சந்தீப் வாரியர், ராகவ் கோயல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ப்ளேயிங் லெவன்
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
கேதர் ஜாதவ், மைக்கேல் பிரேஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், கர்ண் சர்மா, ஷாபாஸ் அகமது