IPL 2023 MI vs PBKS Playing XI:வார இறுதியான இன்றைய தினத்தின் இரண்டாவது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி  பந்து வீச முடிவு செய்துள்ளது. 


நேருக்கு நேர்:


2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது முதலே விளையாடி வரும் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள், இதுவரை 29முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 15 முறையும், பஞ்சாப் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. வான்கடே மைதானத்தில்  இரு அணிகளுக்கு இடையே மொத்தம் 9 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மும்பை அணி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகளில், பஞ்சாப் அணி மூன்றிலும், மும்பை அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த புள்ளி விபரங்களை வைத்துப் பார்க்கும் போது பஞ்சாப் அணியின் கரம் வலுவாக இருப்பதாக உள்ளது. 


நடப்பு தொடரில் இதுவரை:


மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி, மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதனிடையே, பஞ்சாப் அணியும் நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 


பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்


அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரான்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஹர்பிரீத் சிங் பாட்டியா, ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்


பஞ்சாப் கிங்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள்


நாதன் எல்லிஸ், மோஹித் ரதீ, சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், குர்னூர் ப்ரார்


மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்


ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், ரித்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்


மும்பை இந்தியன்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள்


ராமன்தீப் சிங் , குமார் கார்த்திகேயா, ஷம்ஸ் முலானி, விஷ்ணு வினோத், நேஹல் வதேரா