IPL 2023 MI vs PBKS LIVE: அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் பஞ்சராகிப் போன மும்பை இந்தியன்ஸ்; பஞ்சாப் அபர வெற்றி..!
IPL 2023 MI vs PBKS LIVE: மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனால் பஞ்சாப் அணி மும்பை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அதிரடியாக ஆடி வந்த சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் 57 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடிவரும் சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் தனது அரைசத்தினை எட்டியுள்ளார்.
அதிரடியாக ஆடிவந்த கேமரூன் க்ரீன் எல்லீஸ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 43 பந்தில் 67 ரன்கள் சேர்த்தார்.
அதிரடியாக இலக்கை நோக்கி முன்னேறும் மும்பை அணி 15 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக அடிவரும் கேமரூன் க்ரீன் 38 பந்தில் தனது அரைசத்தினை எட்டியுள்ளார்.
சிறப்பாக ஆடிவரும் மும்பை அணி 11.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியுள்ளது.
10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ரன்கள் சேர்த்து வந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டை இழந்துள்ளார். அவர் 27 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார்.
ஒரு விக்கெட்டை இழந்து ஆடி வரும் மும்பை அணி பவ்ர்ப்ளே முடிவில் 54 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ரன்கள் குவித்து வரும் மும்பை அணி 5.2 ஓவர்களில் 51 ரன்களை எடுத்துள்ளது.
நிதானமாக ரன்கள் சேர்த்து வரும் பஞ்சாப் அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ஆடிக் கொண்டு இருந்த அதர்வா பியூஷ் சாவ்லா பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்.
அதிரடி ஆட்டக்காரர் லிவிங்ஸ்டன் பியூஷ் சாவ்லா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அவர் 12 பந்தில் 10 ரன்கள் எடுத்தார்.
சிறப்பாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் 17 பந்தில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை அர்ஜுன் தெண்டுல்கர் பந்து வீச்சில் பறிகொடுத்து வெளியேறினார்.
சிறப்பாக விளையாடி வரும் பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 58 ரன்கள் சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.
நிதானமாக ஆடி வந்த பஞ்சாப் அணியின் ஷார்ட் மும்பை அணியின் கேமரூன் க்ரீன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டிகள் மற்றும் அவற்றின் முடிவுகள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
மும்பை - பஞ்சாப் அணிகள் மோதல்:
வார இறுதியான இன்றைய தினத்தின் இரண்டாவது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். முன்னதாக, ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் மற்றும் அதன் முடிவுகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் தொடர் அறிமுகமானது முதலே விளையாடி வரும் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள், இதுவரை 29முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 15 முறையும், பஞ்சாப் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. வான்கடே மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே மொத்தம் 9 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மும்பை அணி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகளில், பஞ்சாப் அணி மூன்றிலும், மும்பை அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரங்கள்:
பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 223
மும்பை அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 230
பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 87
மும்பை அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 119
தனிநபர் சாதனைகள்: (தற்போது அணியில் உள்ள வீரர்களின் அடிப்படையில்)
பஞ்சாபிற்கு எதிராக மும்பைக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் : ரோகித் சர்மா, 522 ரன்கள்
மும்பைக்கு எதிராக பஞ்சாபிற்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் : ஷிகர் தவான், 70 ரன்கள்
பஞ்சாபிற்கு எதிராக மும்பைக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் : பெஹ்ரண்ட்ரோஃப், 1 விக்கெட்
மும்பைக்கு எதிராக பஞ்சாபிற்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் : ரிஷி தவான், 3 விக்கெட்கள்
பஞ்சாபிற்கு எதிராக மும்பைக்காக அதிக கேட்ச் பிடித்த வீரர் : சூர்யகுமார் யாதவ், 5 கேட்ச்
மும்பைக்கு எதிராக பஞ்சாபிற்காக அதிக கேட்ச் பிடித்த வீரர் : ஷிகர் தவான், 1 கேட்ச்
நடப்பு தொடரில் இதுவரை:
மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி, மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதனிடையே, பஞ்சாப் அணியும் நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -