IPL 2023 LSG vs PBKS LIVE: லக்னோவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பஞ்சாப்; பரபரப்பான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி..!
IPL 2023 LSG vs PBKS LIVE: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
19.3 ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி இலக்கான 160 ரன்களை விட ஒரு கூடுதலாகவே எடுத்து லக்னோவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த ஷிகிந்தர் ராசா தனது விக்கெட்டை பிஷ்னாய் பந்து வீச்சில் இழந்துள்ளார்.
17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்துள்ளது.
ஷ்கந்தர் ராசாவுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்த ஜிதேஷ் தனது விக்கெட்டை மார்க் வுட் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
சிறப்பாக ஆடி வந்த ஷிகந்தர் ராசா 34 பந்தில் அரைசதம் விளாசியுள்ளார்.
சிறப்பாக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாம் கரன் ரவி பிஷ்னோய் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
நிதான ஆட்டத்தில் இருந்து அதிரடியில் இறங்கியுள்ள் பஞ்சாப் அணி 14 ஓவர்கள் முடிவில் 107 ரன்கள் சேர்த்துள்ளது.
க்ருனல் பாண்டியா வீசிய 13வது ஓவரில் ஷிகந்தர் ராசா இரண்டு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் விளாசினார். இந்த ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 99 - 4 .
4 விக்கெட்டுகளை இழந்து ஆடிவரும் பஞ்சாப் அணி 12 ஓவர்கள் முடிவில் 82 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதானமாக ஆடி வந்த ஹர்ப்ரீத் பாடியா 22 பந்தில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
பஞ்சாப் அணி மிகவும் நிதானமாக ரன்கள் சேர்த்து வருகிறது. 10 ஓவர்கள் முடிவில் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக விளையாடி வருகிறது. இந்த ஓவர் முடிவில் 61 ரன்கள் சேர்த்துள்ளது.
7 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதானமாக ரன்கள் குவித்து வரும் பஞ்சாப் அணி 7.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது.
7 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளேவின் கடைசி பந்தில் மேத்யூ ஷார்ட் 22 பந்தில் 34 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். 6 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் சேர்த்துள்ளது.
பஞ்சாப் அணி 160 ரன்களை நோக்கி நிதானமாக ரன்கள் சேகரித்து வருகிறது. ஐந்து ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களை சேர்த்துள்ளது.
2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் பஞ்சாப் அணி 4 ஓவர்கள் முடிவில் 28 ரன்கள் சேர்த்துள்ளது.
160 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி 3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்கம் முதல் நிதானமாக பேட்டிங் செய்த லக்னோ அணி 160 ரன்களை பஞ்சாப்புக்கு இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் சேர்த்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாய்னஸ் 15 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 18 ஓவர்களில் 143 - 5.
நிதான ரன் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள லக்னோ அணி 16 ஓவர்கள் முடிவில் 126 - 4 .
15 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்துள்ளது.
ரபாடா வீசிய 15வது ஓவரில் நிக்கோலஸ் பூரான் தனது விக்கெட்டை ரன் ஏதும் எடுக்காமல் இழந்துள்ளார்.
நிதானமாக விளையாடி வந்த க்ருனல் பாண்டியா ரபாடா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். இவர் 17 பந்தில் 18 ரன்கள் சேர்த்துள்ளார்.
தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் கே. எல். ராகுல் 40 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்துள்ளார்.
2 விக்கெட்டுகளை இழந்தாலும் சிறப்பாக விளையாடி வரும் லக்னோ அணி 12.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியுள்ளது.
12 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்துள்ளனர்.
பஞ்சாப் அணியின் சுழல் பந்து வீச்சுக்கு தடுமாறும் லக்னோ அணி அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி வருகிறது. 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் சேர்த்துள்ளது.
2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் லக்னோ அணி 9 ஓவர்கள் முடிவில் 64 ரன்கள் சேர்த்துள்ளது.
களமிறங்கி மூன்று பந்துகளை சந்தித்த தீபக் ஹூடா 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
பவர்ப்ளேவில் அதிரடியாக விளையாடி வந்த லக்னோ அணி அத்ன் பின்னர் நிதானமாக ஆடியது. 8 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 55 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த கேயல் மேயர்ஸ் தனது விக்கெட்டை ஹர்தீப் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். அவர் 23 பந்தில் 29 ரன்கள் சேர்த்தார்.
அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வரும் லக்னோ அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் லக்னோ அணி 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்துள்ளது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய லக்னோ அணி பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்துள்ளது.
Background
ஐபிஎல் 16வது சீசனின் 21 போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கே.எல் ராகுலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவானும் தலைமை தாங்குகின்றனர்.
ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் 1 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஒரு முறை வெற்றிபெற்றுள்ளது.
இந்தநிலையில், ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நேருக்கு நேர் சாதனையின் முழு விவரம் இதோ...
மொத்தப் போட்டிகள் | 1 |
பஞ்சாப் வெற்றி | 0 |
லக்னோ வெற்றி | 1 |
முடிவு இல்லை | 0 |
பஞ்சாப் தோல்வி | 1 |
லக்னோ தோல்வி | 0 |
பஞ்சாப் அணியின் அதிகபட்ச ஸ்கோர் | 133 |
லக்னோ அணியின் அதிகபட்ச ஸ்கோர் | 153 |
பஞ்சாப் அணியின் குறைந்த ஸ்கோர் | 133 |
லக்னோ அணியின் குறைந்த ஸ்கோர் | 153 |
சிறந்த வீரர்கள்:
புள்ளிவிவரங்கள் | சிறந்த வீரர்கள் | செயல்திறன் |
அதிக ரன்கள் | குயின்டன் டி காக் (லக்னோ) | 46 ரன்கள் |
அதிக விக்கெட்டுகள் | ககிசோ ரபாடா (பஞ்சாப்) | 4 விக்கெட்டுகள் |
அதிக மதிப்பெண் | குயின்டன் டி காக் (லக்னோ | 46 ரன்கள் |
சிறந்த பந்துவீச்சு படம் | ககிசோ ரபாடா (பஞ்சாப்) | 4/38 |
வரும் போட்டிகள்:
- ஏப்ரல் 15 (இன்று) - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், லக்னோ (இரவு 7:30 மணி)
- ஏப்ரல் 28 - பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மொஹாலி (இரவு 7:30 மணி)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), அமித் மிஸ்ரா, அவேஷ் கான், ஜெய்தேவ் உனத்கட், மார்க் வூட், ரவி பிஷ்னோய், ஆயுஷ் படோனி
பஞ்சாப் கிங்ஸ்:
அதர்வா டைய்டு, பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சே, சாம் கரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -