இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 46வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது மே 4ம் தேதி லக்னோவில் உள்ள எகானா மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. 


இந்தநிலையில், தற்போது இந்த போட்டி மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உபியில் உள்ள மாநகராட்சி தேர்தல் மே மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதன் முதல் கட்ட தேர்தல் 4ம் தேதி லக்னோவில் நடைபெற இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் மாலை நடைபெறும் இந்த போட்டியில் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படலாம் என்ற காரணத்திற்காக, இந்த போட்டி மே 3ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு மாற்றப்பட இருக்கிறது. 


முன்னதாக இந்த போட்டியை  பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், வாக்குப்பதிவில் எந்த பாதிப்பு ஏற்படாது என என்றும் செய்திகள் வந்தன. மேலும், இதுபோன்ற சூழ்நிலையில், மகேந்திர சிங் தோனியை பார்க்க ரசிகர்கள் மைதானத்திற்கு வருவார்கள். அதனால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத வகையில் இந்த மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மே 3ம் தேதி மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் மாலை 7. 30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 


இரு அணிகளின் நிலைமை என்ன..? 


இந்த சீசனில் லக்னோ அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்னை அணியும் 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் நிகர ரன் ரேட் அடிப்படையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. முன்னதாக, இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி கொண்டது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 


முழு அணிகள்:


 சென்னை சூப்பர் கிங்ஸ் : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே , ஷிவம் துபே, அம்பதி ராயுடு , மொயீன் அலி , ரவீந்திர ஜடேஜா , எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மகேஷ் தீக்ஷனா , துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, ஆகாஷ் சிங், சுப்ரா ஷானிஸ்பதி, சுப்ரா ஷானிஸ்பதி ரஷீத், ஆர்எஸ் ஹங்கர்கேகர், மிட்செல் சான்ட்னர் , பென் ஸ்டோக்ஸ், அஜய் ஜாதவ் மண்டல், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பகத் வர்மா, நிஷாந்த் சிந்து, சிசண்டா மாகலா


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் : கே.எல். ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ் , தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, மார்க் வூட், ஜெய்தேவ் உனட்கட் , ரவி பிஷ்னோய், அவேஷ் கான், பிரேரக் மன்கட், கிருஷ்ணப்ப கவுதம், ஸ்வாப்னில் சிங், ஸ்வாப்னில் சிங் நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர், டேனியல் சாம்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், யுத்வீர் சிங் சரக், கரண் சர்மா, மயங்க் யாதவ், அமித் மிஸ்ரா, மனன் வோஹ்ரா