RCB vs SRH Head To Head Records:  இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டி விவரங்களை காணலாம். 


நமது ஊரில் எல்லாம் விளையாட்டாக ஒன்றைச் சொல்லுவார்கள், அது “ நாம் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ எதிரணியினரை வெற்றி பெற வைத்து விடக்கூடாது” என்பது தான். அப்படியான நிகழ்வுகள் இரு அணிகளுக்க்கு இடையில் நடைபெற்றுள்ளது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். ஐபிஎல் வரலாற்றில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. அதுவும் 2016ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று தான் கோப்பையைக் கைப்பற்றியது. அதேபோல் பல முக்கியமான் போட்டிகளில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஹைதரபாத் அணி தான் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளதோ இல்லையோ, பெங்களூரு அணியின் அடுத்த கட்ட நகர்வுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனாலே இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நடராஜன் வீசிய துல்லியமான யார்க்கரில் டிவில்லியர்ஸ் தனது விக்கெட்டை இழந்தது மட்டுமில்லாமல் பெங்களூரு அணி தோல்வியோடு ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறியதை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். 


இரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஹைதராபாத்தின் கரங்கள்தான் ஓங்கியுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை 12 போட்டிகளிலும் பெங்களூரு அணி 9 போட்டிகளிலும் வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவு எட்டப்படவில்லை. 


பெங்களூரு அணி நிர்வாகம் எப்போதும் ஒரு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தும் அது, அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலமாக இருக்க வேண்டும் என்பது தான். சிறந்த பந்து வீச்சாளர்கள் என மூன்று பேர் இருந்தால் கூட போதும் என நினைக்கும் அணி. இதனாலே பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்யும் போது பெரும்பாலும் ரன் மழை பொழிகிறது. இதற்கு மற்றொருமொரு காரணமும் உண்டு. பெங்களூரு மைதானம் மிகவும் சிறிய மைதானம் என்பது தான். சொந்த மண்ணில் விஸ்வரூபம் எடுக்கும் பெங்களூரு அணி வெளி மைதானங்களில் கொஞ்சம் நிதானத்துடன் தான் விளையாடும். 


இரு அணிகளுக்கு இடையிலான நேருக்கு நேர் புள்ளி விபரங்கள் 


மொத்தம் நடைபெற்ற போட்டிகள் -  22 


பெங்களூரு வெற்றி பெற்ற போட்டிகள் - 09 


ஹைதராபாத் வெற்றி பெற்ற போட்டிகள் -  12 


பெங்களூரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 227 


ஹைதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 231


பெங்களூரு அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் - 68 


ஹைதராபாத் அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் - 72 


iன்றைய போட்டியில் கணிக்கப்பட்ட அணிகள் 



சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அன்மோல்பிரீத் சிங், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், ஃபசல்ஹக் ஃபரூக்கி




ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், வெய்ன் பார்னெல், கர்ன் சர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்