GT vs KKR: குஜராத் vs கொல்கத்தா.. ஆட்டத்தை மாற்றப்போகும் வீரர் யார்? - வெற்றி வாய்ப்பு யாருக்கு?

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியில் கள நிலவரத்தை  காணலாம். 

Continues below advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியில் கள நிலவரத்தை  காணலாம். 

Continues below advertisement

16வது ஐபிஎல் சீசன்: 

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 16வது ஐபிஎல் தொடரில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், குஜராத், கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் விளையாடி வருகிறது. இதில் இன்று நடக்கும் 13வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மாலை 3.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றது. அஹமதாபாத் மோடி மைதானத்தில்  நடைபெறும் இப்போட்டி ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய ஒன்றாக மாறியுள்ளது. 

மைதானம் எப்படி? 

இந்த மைதானத்தில் இதுவரை 8 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 2 போட்டிகளிலும், 2வதாக பேட் செய்த அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எந்த அணியும் 200 ரன்களை கடந்ததில்லை.  அதிகப்பட்சமாக குஜராத் அணி சென்னை அணிக்கு எதிராக 182 ரன்களும், குறைந்த ஸ்கோர் ஆக கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 123 ரன்களையும் பதிவு செய்துள்ளது. 

இந்த ஐபிஎல் தொடரில் 2 ஆட்டங்களில் விளையாடி குஜராத் அணி இரு வெற்றிகளையும், கொல்கத்தா அணி தலா ஒரு வெற்றி, தோல்வியையும் பெற்றுள்ளது. முன்னதாக இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளது. இதில் குஜராத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 

 வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்) 

சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில்,  ராகுல் திவேடியா, ரஷித் கான், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள் ஆகியோர் குஜராத் அணியில் இடம் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.  இதேபோல்   நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், நாராயண் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர்,ஷர்துல் தாகூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் கொல்கத்தா அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் வீரர் (impact Player) யார்?

குஜராத் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக அபினவ் மனோகர், ஜோஷ்வா லிட்டில், மோஹித் ஷர்மா, தசுன் ஷனகா, கேஎஸ் பாரத் ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்புள்ளது. இதே கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா, என். ஜெகதீசன், ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், சுயாஷ் சர்மா ஆகியோரில் ஒருவர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola