IPL 2023 GTvsKKR: ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் களமிறங்கியுள்ள 10 அணிகள் அனைத்தும் புள்ளிப் பட்டியலில்  முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெற மும்மரமாக விளையாடி வருகின்றன. இதில் ஏற்கனவே டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் தொடர் தோல்வியால் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது.


மற்ற 8 அணிகளில் 4 அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் அணிகளாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நடப்புச் சாம்பியனும் பலமான அணியுமான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று அதாவது ஏப்ரல் 29ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 


இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 


இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி அதில் மூன்றி மட்டுமே வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்த சீசன் கொல்கத்தா அணிக்கு ஏமாற்றத்துடன் தொடங்கியது எனலாம். பஞ்சாப் அணியுடனான மோதலில் மழை காரணமாக டக்வெர்த் - லீவிஸ் -ஸ்டெரின் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை ஏற்கவேண்டிய நிலைக்கு ஆளானது. இந்த தொடரில் கொல்கத்தா பெற்ற வெற்றி என்றால் அது பெங்களூரு அணிக்கு எதிரான 2 போட்டிகளும், குஜராத் அணிக்கு எதிரான ஒரு போட்டியும் தான்.


குஜராத் அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியது கொல்கத்தா அணிக்கு பலமான விசயமாக உள்ளது. இன்று நடைபெறும் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுவதால் கொல்கத்தா அணி வெற்றிக்கு தங்களை தயார் படுத்தும் பணிகளில் மும்மரமாக இருக்கிறது. பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின்னர் கொல்கத்தா அணி இன்று களமிறங்குவதால் அணியில் நம்பிக்கை சற்று அதிகமாகவே இருக்கும் எனலாம் 


இதுவரை குஜராத் டைட்டன்ஸ் 


கடந்த ஆண்டு களமிறங்கி கோப்பையை தன்வசமாக்கிய குஜராத் அணி இந்த ஆண்டும் வீறுநடைபோட்டு புள்ளிப்பட்டியலில் ஏற்றத்துடன் இருக்க முனைப்பு காட்டும். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி இரண்டு போட்டிகளில் மட்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள குஜராத் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்குச் செல்லும். மேலும் தனது சொந்த மைதானத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியைச் சந்தித்த குஜராத் அணி அதற்கு பதிலடி வழங்கிம் நோக்கில் சிறப்பாக செயல்படும் எனலாம்.