IPL 2023, GT vs MI: ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதி வருகின்றனர். முதலில் டாஸ் வென்ற வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக சுப்மல் கில் 56 ரன்களும், மில்லர் 46 ரன்களும், அபினவ் மனோகர் 42 ரன்களும் எடுத்திருந்தனர். மும்பை அணி சார்பில் சாவ்லா அதிகபட்சமாக 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் வெளியேற, ரஷித் கான் 8வது ஓவர் வீசி 13 ரன்களில் இஷான் கிஷன் மற்றும் 2 ரன்களில் திலக் வர்மாவை வெளியேற்றினார்.
அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி 7.6 ஓவர்களில் 43 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து தடுமாறியது. களமிறங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேமரூன் க்ரீன் 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்து நூர் அகமது பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற, அதேஓவரிம் டிம் டேவிர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.
மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு 12 பந்துகளில் 23 ரன்கள் அடித்தார். தொடர்ந்து, நெஹல் வெதாரா மற்றும் பியூஸ் சாவ்லா இணைந்து மும்பை அணியின் வெற்றிக்காக போராட தொடங்கினர். இருவரும் அவ்வபோது சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை விரட்ட, 17 ஓவர்களில் மும்பை அணி 135 ரன்களை எடுத்திருந்தது.
17. 1 பந்தில் பியூஸ் சாவ்லா 18 ரன்கள் எடுத்து வெளியேற, மும்பை அணிக்கு 17 பந்திகளில் 73 ரன்கள் தேவையாக இருந்தது. தொடர்ச்சியாக மோகித் சர்மா வீசிய அதே ஓவரில் நெஹல் வெதாரா 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
கடைசி ஓவரில் அர்ஜூன் டெண்டுல்கர் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர் அடித்து 13 ரன்களில் வெளியேற, கடைசி 2 பந்தில் மும்பை அணிக்கு 56 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி இரண்டு பந்தும் டாட்டாக அமைய, குஜராத் டைட்டன்ஸ் அணி இதன் மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.