மைதான ஊழியர் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் கால்களைத் தொட்டு வணங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி இந்திய அணிக்கும், சென்னை அணிக்கும் செய்த சாதனைகள் அனைத்தும் ரசிகர்கள் என்னும் நிலையை தாண்டி அவரை வழிபடும் பக்தர்களாக மாற்றியுள்ளது.


எம்எஸ் தோனி


கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி வரலாற்றில் ஒரு சிறந்த கேப்டன் என பெயர் பெற்றவர். இந்திய அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் அத்தனை கோப்பைகளை வென்று தந்துள்ளார். தற்போது 41 வயதாகும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார். அவர் அவ்வப்போது வந்து அடிக்கும் ஒன்றிரண்டு சிக்ஸர்களை காணவே ரசிகர்கள் ஆவலோடு வந்து மைதானத்தில் காத்திருக்கும் அளவுக்கு அவர் மீது மோகம் கொண்டுள்ளனர் ரசிகர்கள். மேலும் அவர் மும்பை அணியுடனான போட்டியின் போது சூர்யகுமார் யாதவின் விக்கெட்டுக்கு அப்பீல் செய்து அம்பயர் அவுட் கொடுக்காத நிலையில், பந்து வீசிய சான்ட்னரே எதற்காக அப்பீல் என முழித்துக்கொண்டிருக்க, தோனி டிஆர்எஸ் எடுத்தார். ரிவ்யூவில் பந்து லேசாக கிளவுஸில் உரசுவது தெரிய மீண்டும் ஒருமுறை 'தோனி ரிவியு சிஸ்டம்' என நிரூபித்தார். 



'வீ வான்ட் தோனி'


அந்த போட்டி மும்பையில் நடந்தாலும் தோனி ரசிகர்களே அதிகம் இருந்தது சூழ்ந்திருந்த மஞ்சள் படையை பார்க்கும்போதே தெரிந்தது. சென்னை அணி எளிதாக வெற்றிபெறும் என்ற நிலையில், தோனியின் பேட்டிங்கை பார்க்கமுடியும் போய் விடுமோ என்ற அச்சத்தில் 'வீ வான்ட் தோனி' என ஒவ்வொரு விக்கெட் விழும்போதும் கத்தியது மும்பைக்கே கேட்டிருக்கும். 


தொடர்புடைய செய்திகள்: ADMK: 'ஸ்டெர்லைட் விவகார கருத்து.. இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல' ஆர்.என்.ரவிக்கு எதிராக களமிறங்கிய அ.தி.மு.க...!


காலைத் தொட்டு வண்ணங்கிய ஊழியர்


மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் மைதான ஊழியர் ஒருவர் அவரது கால்களை தொட்டு வணங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தீயாய் பரவின. கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் கால்களை தொட்டு வணங்குவது இது முதல் முறையல்ல. சமீபத்தில் பின்னணி பாடகர் அரிஜித் சிங்கும் இந்த தொடரின் தொடக்க விழாவில், தோனியின் பாதங்களை தொட்டு வணங்கினார். இந்தியாவுக்காக அவர் விளையாடிய நாட்களில் கூட, அவரிடம் அன்பைப் பெற பார்வையாளர்கள் கூட மைதானத்திற்குச் சென்ற பல நிகழ்வுகள் உள்ளன. 






கோப்பையை வெல்லும் முனைப்பில் தோனி


குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இந்த சீசனின் இரண்டாவது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை வீழ்த்தி வெற்றியின் பாதைக்கு திரும்பியது. அதன் பின் மும்பை மண்ணில் மும்பை அணியை வீழ்த்தி அதகளம் செய்தது. கடைசி ஓவர்களை நன்றாக வீசுவதற்கு பந்து வீச்சாளர் இல்லாமல் தோனி சிரமப்பட்டு வருகிறார். குஜராத் அணியுடனான போட்டியிலும் கடைசி நான்கு ஓவர்களில்தான் மேட்சை விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.