ஐ.பி.எல். திருவிழா கொண்டாட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முதல் குவாலிஃபயர் சுற்றில் மோதும் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நோ பால் வீசிய நல்கண்டே:
குஜராத் அணிக்காக இன்று பந்துவீசிய நல்கண்டே வீசிய பந்தில் 5 ரன்களில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் அவுட்டானார். ஆனால், நல்கண்டே வீசிய அந்த பந்து நோ பாலாக இருந்ததால் ருதுராஜ் தப்பினார். பின்னர், அவர் அதிரடியாக ஆடி 60 ரன்கள் விளாசினார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்த சீசனில் தொடக்கத்திலிருந்தே குஜராத் டைட்டன்ஸ் அணி சேசிங் செய்வதில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் தர்ஷன் நல்கண்டே (Darshan Nalkande ) குஜராத் அணிக்காக முதல் முதலில் களம் இறங்கியுள்ளார்.
இந்த சீசனில் ஒரு போட்டிகளில் கூட விளையாடாத தர்ஷன் நல்கண்டே, முதல் தகுதிச் சுற்று போட்டியில் அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலது கை வேகப்பந்து வீச்சாளாரான தர்ஷன் 2 ஓவர் வீசியுள்ளார். 2 ஓவரில் 22 ரன் வழங்கியுள்ளார். இரண்டாவது ஓவரில் மூன்றாவது பந்தை வீசிய தர்ஷன், கெய்க்வாட் கேட்ச் அவுட் ஆனார். ஆனால், பந்து க்ரீஸ் வெளியே சென்றால போட்டி நடுவர் நோ பால் அறிவித்தார். ஃப்ரி ஹிட் கிடைத்தது சி.எஸ்.கே. அணிக்கு.
யார் இந்த தர்ஷன் நலகாண்டே?
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தர்ஷன், உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் விதார்பா அணியில் விளையாடி வருகிறார். 2011-2022 சீசன் செயத் முஸ்தாக் அலி டிராபி போட்டியில்அடுத்தடுத்த பந்துகளில் 4 விக்கெட்கள் எடுத்தா. கர்நாடக அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முக்கிய விக்கெட்களை எடுத்து தந்த தர்ஷன் பிரபலமாக தொடங்கினார்.
ஐ.பி.எல். போட்டிகளில் அறிமுகம்:
தர்ஷன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல். சீசனில் பஞ்சாப் கிங்கஸ் அணியில் விளையாட ஏலம் எடுக்கப்பட்டார். கடந்தாண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது, இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட்கள் எடுத்திருந்தார்.
டி-20 கேரியர்:
தர்ஷன், 34- 20-ஓவர் போட்டிகளில் 57 விக்கெட்கள் எடுத்துள்ளார். இதுவரை அவர் 9 ரன்வழங்கி 5 விக்கெட்கள் எடுத்துள்ளது மிகச் சிறந்த பர்ஃபாமன்ஸாச சொல்லப்படுகிறது.