மார்ச் 31ம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 அணிகளாக விளையாடப்பட்டு வரும் ஐபிஎல் தொடரானது கடந்த 2008ம் ஆம் ஆண்டு 8 அணிகளுடன் களமிறங்கியது. 


கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் சீசனின் கோப்பையை வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இரண்டாவது இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பிடித்தது. இதை பற்றி நாம் அனைவரும் அறிவோம்... இதுவரை தெரியாத ஐபிஎல் தொடரின் முதல் பந்தில் இருந்து முதல் சிக்ஸர் மற்றும் விக்கெட் வரை அனைத்தையும் இங்கே பார்க்கலாம். 



  • ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியானது ஏப்ரல் 18, 2008 அன்று நடைபெற்றது.

  • இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர்.

  • ஐபிஎல் தொடரில் முதல் ஓவரை வீசியவர் பெங்களூர் அணியிலிருந்த பிரவீன் குமார்.

  • ஐபிஎல் தொடரில் முதல் பந்தை சந்தித்தவர் சவுரவ் கங்குலி

  • ஐபிஎல் தொடரின் முதல் ரன் லெக் பை மூலம் வந்தது. 

  • ஐபிஎல் தொடரில் முதல் வைட் பந்தையும் வீசியவர் பிரவீன் குமார்தான்.

  • ஐபிஎல் தொடரின் முதல் ஓவரில் அது மூன்று ரன்கள் மட்டுமே வந்தன. வந்த ரன்கள் எல்லாமும் எக்ஸ்ட்ராஸ் மூலமே வந்தது.

  • ஐபிஎல் தொடரின் முதல் பவுண்டரியை கொல்கத்தா அணிக்காக விளையாடிய பிரண்டன் மெக்கல்லம் பேட்டில் இருந்து வந்தது. இந்த பவுண்டரியானது ஜாகீர் கான் பந்தில் அடிக்கப்பட்டது.

  • ஐபிஎல் தொடரின் முதல் சிக்ஸரையும் பிரண்டன் மெக்கல்லமே அடித்தார். அதுவும் ஜாகீர் கான் பந்திலே அடிக்கப்பட்டது.

  • ஐபிஎல் தொடரின் முதல் விக்கெட்டை ஜாகீர் கான் எடுத்தார். இந்த முதல் விக்கெட்டில் வீழ்ந்தது சவுரவ் கங்குலி.

  • ஐபிஎல் தொடரின் முதல் கேட்ச்சை ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஜாக் காலிஸ் பிடித்தார். (சவுரவ் கங்குலி விக்கெட்)

  • போட்டியின் முதல் அரைசதம் பிரண்டன் மெக்கல்லம் பேட்டில் இருந்து வந்தது. அவர் 32 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

  • ஐபிஎல் தொடரின் முதல் சதத்தையும் பிரண்டன் மெக்கல்லமே அடித்தார். 

  • இந்த போட்டியில் முதல் முறையாக 200 ரன்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்தது. 

  • முகமது ஹபீஸ் ஐபிஎல் போட்டியில் முதல் பாகிஸ்தான் வீரராக விளையாடினார்.

  • ஐபிஎல் தொடரில் முதன்முறையாக பாகிஸ்தானின் அசாத் ரவுஃப் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ரூடி குர்ட்சன் ஆகியோர் கள நடுவர்களாக ஆனார்கள்.

  • ஐபிஎல்லின் முதல் டிவி நடுவராக அமிஷ் சாஹேபா இருந்தார்.

  • ஜவகல் ஸ்ரீநாத் முதல் ஓவர் ஆல் போட்டி நடுவராக இருந்தார்.

  • ஐபிஎல் தொடரின் முதல் ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதை பிரெண்டன் மெக்கல்லம் பெற்றார்.

  • போட்டியின் முதல் பார்ட்னர்ஷிப் சவுரவ் கங்குலி மற்றும் பிரண்டன் மெக்கல்லம் இடையேயான 61 ரன்கள்.

  • போட்டியின் முதல் ஹாட்ரிக் சாதனையை சென்னையின் லட்சுமிபதி பாலாஜி கைப்பற்றினார்.

  • போட்டியின் முதல் நோ பால் அசோக் திண்டா வீசினார். இரண்டாவது இன்னிங்ஸின் இந்த நோ பால் நான்காவது ஓவரில் வீசினார்.