வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அணி நிர்வாகம் சிறப்பு மரியாதையை செய்ய இருக்கிறது. 


இன்றுடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்று 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து, 5 ஐபிஎல் கோப்பைகளுடன் ரோகித் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 






கடந்த 2023ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து  ரோகித் சர்மாவிற்கு இன்றைய நாளில் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. கேப்டனாக தான் பதவி வகித்த முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார். 


கடந்த 2023ம் ஆண்டு இறுதி போட்டிக்கு பிறகு ஐபிஎல் இணையதளத்தில் ரோகித் சர்மா பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ திடீரென எங்கள் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, ரிக்கி பாண்டிங் பதவியில் இருந்து விலகி, எனக்கு கேப்டன் பதவி கிடைத்தது. அதை விரும்பி நான் ஏற்றுக்கொண்டேன், ரசித்தேன். நான் இரண்டு ஆண்டுகள் துணை கேப்டனாக இருந்ததால் பொறுப்பு என் தோள்களில் விழும் என்று எனக்கு தெரியும். 


எனது சொந்த ஊரான மும்பையில் ஐபிஎல் கோப்பையை வென்றது ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் செயல்பட்ட விதம் அணியின் தன்மையை காட்டுகிறது. இது எளிதான வெற்றி அல்ல, நான் மிகவிம் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த உணர்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை” என தெரிவித்தார். 


இந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி..? 


ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் 2023 இல் சிறப்பாக செயல்பட முடியவில்லை. 7 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார். மோசமான ஆட்டத்தால் மும்பை அணியால் கடந்த சீசனில் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.


அதேபோல், இந்த சீசனில் ரோகித் சர்மா  இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 181 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 65 ரன்கள். 2022 சீசனில் ரோஹித்தால் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியவில்லை. அவர் 14 போட்டிகளில் 268 ரன்கள் எடுத்தார். அவரது சிறந்த ஸ்கோர் 48 ரன்கள். 2021 ஐபிஎல்லில் ரோஹித் ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். அவர் 13 போட்டிகளில் 381 ரன்கள் எடுத்தார்.