டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் , டெல்லி அணி வீரர்களின் கிட் போக்குகளில் இருந்து திருடப்பட்ட பொருட்களை அதிகாரிகள் திருடர்களிடமிருந்து மீட்டுள்ளனர் என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.
வீரர்களிடம் திருட்டு:
கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 15) ஐபிஎல் போட்டியில் ஆர்சிபிவுடனான போட்டிக்குப் பிறகு பெங்களூரில் இருந்து டெல்லி வந்தவுடன் அந்தந்த ஹோட்டல் அறைக்கு சென்ற பின்னர் வீரர்கள் அதைப் பற்றி அறிந்தனர். பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் போது திருட்டு நடந்துள்ளது. இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க விளையாட்டு உபகரணங்களின் ஏற்றுமதியின் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.
பொருட்கள் மீட்பு:
இந்த திருட்டுக்குப் பிறகு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர் திருடப்பட்ட பொடுட்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட பொருட்களில் 11 பேட்டுகள், ஹெல்மட், காலில் கட்டும் பேட்கள் மீட்கப்பட்டுள்ளன.
தங்களுடைய கிட்பேக்குகள் தங்களுடைய ஹோட்டல் அறைகளுக்கு வரும் வரை திருட்டு நடந்ததை வீரர்கள் யாருக்கும் தெரியவில்லை. திருடப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவற்றை அதிகாரிகள் மீட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் உடனடி நடவடிக்கையும், விரைவான விசாரணையும் இத்தகைய பிரச்சினைகளைக் கையாள்வதில் அவர்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன என்று டெல்லி அணி நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
வார்னர் நன்றி:
டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் இன்று அதாவது ஏப்ரல் 21, 2023 அன்று, வீரர்களின் கிட்பேக்குகளில் இருந்து பெரும்பாலான திருடப்பட்ட பொருட்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். முக்கியமான தனிப்பட்ட உடைமைகள் மற்றும் உபகரணங்களை இழந்த வீரர்களுக்கு திருடப்பட்ட பொருட்களை மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
காவல்துறையினரின் சரியான நேரத்தில் நடவடிக்கை, குற்றங்களைத் தீர்ப்பதிலும் நீதியை உறுதி செய்வதிலும் அவர்களின் அர்ப்பணிப்பையும் திறமையையும் பிரதிபலிக்கிறது என அணி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பலரும் காவலர்களை பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில், டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு போலீஸ் அதிகாரி திருடப்பட்ட பொருட்களுடன் நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த ஸ்டோரியில் வார்னர் “ காவலர்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டனர். இன்னும் சில பொருட்களைக் காணவில்லை ஆனால் நன்றி."
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் பரிதாபமாக இருக்கிறது. டேவிட் வார்னர் தலைமையிலான அணி 10 அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.