ஐபிஎல் 16வது சீசனின் நேற்றைய 44வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த சீசனில் மூன்றாவது வெற்றியை பெற்றது. 


குஜராத் அணிக்கு 131 ரன்கள் இலக்கை நிர்ணயித்த டெல்லி அணி, ஆரம்பம் முதலே வலுவாக பந்த் வீசியது. குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்திருந்த போதிலும், அந்த அணியால் 131 ரன்கள் எட்ட முடியவில்லை. கடைசி ஓவர் வீசிய இஷாந்த் சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தி 12 ரன்களை கட்டுப்படுத்தினார். இதன்மூலம் டெல்லி அணி  5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


புள்ளி பட்டியல்: 


ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 6 வெற்றிகளுடன் இன்னும் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் இன்னும் கடைசி இடத்திலேயே இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், 8, 9 மற்றும் 10வது இடங்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் தலா 6 புள்ளிகளுடன் இருக்கின்றன. 


ஐபிஎல் புள்ளிகள் அட்டவணை:


1. குஜராத் டைட்டன்ஸ் (12 புள்ளிகள்)


2. ராஜஸ்தான் ராயல்ஸ் (10 புள்ளிகள்)


3. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (10 புள்ளிகள்)


4. சென்னை சூப்பர் கிங்ஸ் (10 புள்ளிகள்)


5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (10 புள்ளிகள்)


6. பஞ்சாப் கிங்ஸ் (10 புள்ளிகள்)


7. மும்பை இந்தியன்ஸ் (8 புள்ளிகள்)


8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (6 புள்ளிகள்)


9. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (6 புள்ளிகள்)


10. டெல்லி கேபிடல்ஸ் (6 புள்ளிகள்)



பர்பிள் கேப்:





  1. முகமது ஷமி (ஜிடி) - 17 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

  2. துஷார் தேஷ்பாண்டே (சிஎஸ்கே) - 17 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

  3. முகமது சிராஜ் (ஆர்சிபி) - 15 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

  4. ரஷித் கான் (ஜிடி) - 15 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

  5. அர்ஷ்தீப் சிங் (பிபிகேஎஸ்) - 15 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)



ஆரஞ்சு கேப் : 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாப் டு பிளேசிஸ் 9 போட்டிகளில் விளையாடி 466 ரன்களுடன் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து மிரட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 போட்டிகளில் 428 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்திலும், சென்னை அணியின் டெவான் கான்வே 414 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார். 



  1.  ஃபாஃப் டு பிளெசிஸ் (ஆர்சிபி) - 468 ரன்கள் (9 போட்டிகள்)

  2.  யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ஆர்ஆர்) - 428 ரன்கள் (8 போட்டிகள்)

  3. டெவோன் கான்வே (சிஎஸ்கே) - 414 ரன்கள் (9 போட்டிகள்)

  4. விராட் கோலி (ஆர்சிபி) - 364 ரன்கள் (9 போட்டிகள்)

  5. ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே) - 354 ரன்கள் (9 போட்டிகள்)