சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச முடிவு செய்துள்ளார். 


நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ  அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த ஆண்டு புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்த சென்னை அணி, நடப்பாண்டு முதல் போட்டியிலேயே தோல்வியுற்றது. இதனிடையே, கடந்த ஆண்டு புள்ளிப்பட்டியல் மூன்றாம் இடம் பிடித்த லக்னோ அணி,  முதல் போட்டியிலேயே டெல்லி அணியை வீழ்த்தி நடப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதனால் லக்னோ அணி தொடர் வெற்றியை பதிவு செய்யவும், சென்னை அணி முதல் வெற்றியை பெறவும் முனைப்பு காட்டி வருகிறது.


3 ஆண்டுகளுக்குப் பின் சேப்பாக்கத்தில் போட்டி:


மேலும் கடைசியாக சென்னை அணி இங்கு 2019 ஆம் ஆண்டு விளையாடியது. அந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகள் சென்னை அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி சொந்த ஊர் மைதானத்தில் களமிறங்குகிறது. இதனால், சென்னை ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்


டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), சிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஆர்எஸ் ஹங்கர்கேகர்


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்


துஷார் தேஷ்பாண்டே, டுவைன் பிரிட்டோரியஸ், சுப்ரான்சு சேனாபதி, ஷேக் ரஷீத், அஜிங்க்யா ரஹானே


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்


கே.எல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, மார்க் வூட், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அவேஷ் கான்


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்


ஆயுஷ் படோனி, ஜெய்தேவ் உனத்கட், டேனியல் சாம்ஸ், பிரேராக் மன்கட், அமித் மிஸ்ரா