மே 3ம் தேதி மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் மாலை 7. 30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடரின் 24வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று சின்னசாமி பெங்களூர் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற கேப்டன் ஃபாப் சு பிளிசி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர் ருதுராஜ் 3 ரன்களில் வெளியேற, டெவான் கான்வே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 43 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உதவியுடன் 83 ரன்கள் குவித்தார்.
இதுதவிர, பெங்களூரின் பந்துவீச்சாளர்கள் பந்துகளை சிவம் துபே பறக்கவிட்டு, அரைசதம் கடந்தார்.
111 மீட்டர் தூரம் சிக்ஸ் அடித்த சிவம் துபே:
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மைதானம் முழுவதும் வாணவேடிக்கை காட்டிய துபே, 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்தார். இந்த 5 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர் 111 மீட்டர் நீளமான சிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது, அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹர்ஷல் பட்டேல் வீசிய 13வது ஓவரில், சிவம் துபே 111 மீட்டர் தூரம் ஒரு சிக்ஸர் அடித்தார், இது இதுவரை ஐபிஎல் 2023 சீசனில் இரண்டாவது மிக நீண்ட சிக்ஸராக பதிவானது. இந்த பட்டியலில் பெங்களூர் கேப்டன் ஃபாப் டு பிளிசி, 115 மீட்டர் சிக்ஸருடன் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் 2023ல் மிக நீண்ட சிக்சர் அடித்த வீரர்கள்:
- ஃபாப் டு பிளிசி - 115 மீ
- சிவம் துபே - 111 மீ
- சிவம் துபே - 102 மீ
- ரின்கு சிங் - 101 மீ
- நேஹல் வதேரா - 101 மீ
- ரஹ்மானுல்லா குர்பாஸ் - 101 மீ
3வது முறையாக 100 மீ சிக்ஸர் அடித்த சிவம் துபே:
சிவம் துபே இந்த ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக 100 மீட்டருக்கு மேல் சிக்ஸ் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக, இந்த சீசனில் சிவம் துபே 101 மீட்டர் மற்றும் 103 மீட்டர் சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
போட்டி சுருக்கம்:
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கான்வே மற்றும் சிவம் துபே அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது.
அதன்பிறகு களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர். பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டு பிளிசி 62 ரன்களும், மேக்ஸ்வல் 76 ரன்களும் எடுத்திருந்தனர்.
புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, இரண்டு தோல்வியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. பெங்களூர் 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது.