ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி மேக்ஸ்வேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 189 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 


 


இந்நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி அணியின் இன்னிங்ஸின் போது ஆட்டத்தின் 17ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அப்போது களத்தில் இருந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்தை தூக்கி அடித்தார். அந்தப் பந்தை விராட் கோலி ஒரு கையில் சூப்பராக குதித்து பிடித்தார். அவரின் இந்தக் கேட்ச் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 


 






இந்தக் கேட்ச் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வயசிலும் உங்களுடைய ஃபிட்னஸ் மிகவும் சிறப்பாக உள்ளது என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். மற்ற சிலர் இது ஐபிஎல் தொடரின் சிறப்பான கேட்ச்களில் ஒன்றும் பதிவிட்டு வருகின்றனர். 


 






 






 






 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண