இன்றைய ஐபிஎல் 21 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நேருக்கு நேர் மோதி வருகின்றனர்.  புள்ளி பட்டியலில் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் 8 வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியுடன் 3வது இடத்தில் உள்ளது.


முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேட் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் புவனேஸ்வர் வீசிய முதல் இரண்டு பந்துகளில் பௌண்டரி சென்றது.


அதைதொடர்ந்து, சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் மூன்றாவது ஓவரில் குஜராத் அணியின் தொடக்க வீரர் கில் 7 ரன்களில் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து நடராஜன், சாய் சுதர்சனை 11 ரன்களில் வெளியேற, குஜராத் அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்து இருந்தது. 


ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்த அபினவ் மனோகர் பஇம்ரான் மாலிக் மற்றும் நடராஜன் பந்துகளை பௌண்டரிக்கு ஓடவிட்டார். தொடர்ந்து, குஜராத் அணியின் ரன் எண்ணிக்கை மெல்ல எகிற தொடங்கியது. இந்த ஜோடி 34 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடி வந்த அபினவ் மனோகர் 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து புவனேஸ்வர்குமார் வீசிய 19 வது ஓவரில் அவுட் ஆனார். 


அடுத்து களமிறங்கிய திவாட்டியா தன் பங்கிற்கு நடராஜன் பந்தில் ஒரு சிக்சர் அடித்து ரன் அவுட்டானார். தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா அரைசதம் கடக்க, அடுத்த பந்தே ரசித் கான் நடராஜன் பந்தில் கீளின் போல்ட் ஆனார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்து, ஹைதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. 


163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கனே வில்லியம்சன் மற்றும் அபிசேக் சர்மா களமிறங்கினர். தொடக்கத்தில் இந்த ஜோடி 3 ஓவர் முடிவில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 


அதன்பிறகு வேகம் எடுத்த அபிஷேக் ஷர்மா, பெர்குசன் வீசிய 6 ஓவரில் தொடர்ச்சியாக 4 பௌண்டரி அடித்து அசத்த, 6 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து அரை சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட அபிஷேக் ஷர்மா 32 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ரசித் கான் வீசிய 9 வது ஓவரில் அவுட் ஆனார். 




ராகுல் திவாட்டியா வீசிய 11 வது ஓவர் முதல் பந்தில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு ஹைதராபாத் அணி 100 ஐ கடக்க உதவி செய்தார் திரிபாதி. அதற்கு அடுத்த பந்தே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக திரிபாதி வெளியேற, அவருக்கு பதிலாக பூரன் களமிறங்கினார். 


தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த வில்லியம்சன் 42 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தி வந்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 17 வது ஓவர் முதல் பந்தில் வில்லியம்சன் 57 ரன்களில் வெளியேற, ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு 18 பந்துகளில் 28 ரன்கள் தேவையாக இருந்தது. 


பெர்குசன் வீசிய அடுத்த ஓவரில் பூரன் ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸரை தெறிக்கவிட்டார். சமி வீசிய அடுத்த ஓவரிலும் பூரன் ஒரு பௌண்டரியை ஓடவிட, மார்க்கரம் தன் பங்கிற்கு ஒரு பௌண்டரி அடித்தார். 6 பந்துகளில் 1 ரன் தேவை என்ற நிலையில் பூரன் சிக்ஸர் அடித்து ஹைதராபாத் அணியை வெற்றிபெற செய்தார். 


ஹைதராபாத் அணியில் பூரன் 34 ரன்களுடனும், மார்க்கரம் 12 ரன்களுடனும் இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண