சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே விளையாடிய 5 ஆட்டங்களிலும் ஒற்றை இலக்க ஸ்கோரைப் பெற்று ஆட்டமிழந்ததால், அவர் பேட்டிங்கில் மிகவும் கடினமான நேரத்தை சந்தித்து கொண்டிருந்தார்.
கெய்க்வாட்டின் இந்த சொதப்பலான ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்தனர். சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரர் சீசனின் தொடக்கத்தில் கெய்க்வாட் சிரமப்படுவது இது முதல் முறை அல்ல. உண்மையில், ஐபிஎல் 2020 மற்றும் ஐபிஎல் 2021 இல் கூட, ருதுராஜ் கெய்க்வாட் அந்த சீசனின் முதல் மூன்று போட்டிகளில் ஒற்றை இலக்க ஸ்கோரைப் பதிவு செய்தார். ருதுராஜ் கெய்க்வாட் மோசமான தொடக்கத்திற்குப் பிறகு கடந்த சீசனில் வெளிப்படுத்திய ஃபார்முக்கு மீண்டு(ம்) வருவார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதை நிரூபிக்கும் விதமாக இன்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் அரைசதம் கடந்து அதிரடியாக விளையாடி வருகிறார். தொடர்ந்து, குஜராத் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்டு கொண்டு இருக்கிறார்.
முன்னதாக, 24 வயதே ஆன ருதுராஜ் 22 கடந்த ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 839 ரன்களை குவித்தார். இவற்றில் 7 அரைசதங்கள் அடங்கும். நடப்பு ஐ.பி.எல். தொடரில் மட்டும் ஒரு சதத்துடன் 635 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.
ஐ.பி.எல். தொடரில் ஜாம்பவனாக வலம் வரும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. நடப்பு தொடரில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய சென்னையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்