ஐ.பி.எல். தொடரின் 28ஆவது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. மும்பையின் டிஓய் பட்டீல் மைதானத்தில் போட்டியில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை  தேர்வு செய்தது. காயம் காரணமாக பஞ்சாப் அணி கேப்டன் மயங்க் அகர்வால் இந்தப்போட்டியில் விளையாடாமாட்டார். அவருக்கு பதிலாக தவான் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 


இதையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். தொடக்கத்திலேயே பஞ்சாப் அணியின் கேப்டன் தவான் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து, பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டையும்  நடராஜன் வீழ்த்தினார். இவர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நடராஜன் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 12 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் 2 ம் இடத்திற்கு சென்றார். 


அடுத்தடுத்து, ஜானி பாரிஸ்டோ  மற்றும் ஜித்தேஷ் ஷர்மா விக்கெட் வீழ்ந்ததன் மூலம் பஞ்சாப் அணி 7.6. ஓவர்களில் 61 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 13 ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் லிவிங்ஸ்டன், ஷாருக்கான் மட்டும் களத்தில் இருந்து ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. 






தொடர்ந்து, சிறப்பாக ஆடிவந்த லிவிங்ஸ்டன் அரைசதம் கடக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ஷாருக்கான் 28 பந்துகளில் 26 ரன்கள் அடித்து புவி வீசிய 17 வது ஓவரில் அவுட் ஆனார். கடைசி ஓவர் வீசிய உம்ரான் மாலிக், வரிசையாக ஒடியன் ஸ்மித், ராகுல் சாகர் மற்றும் வைபவ் அரோரா விக்கெட்களை தூக்கினார். கடைசி பந்தில் அர்ஸ்தீப் ரன் அவுட் ஆனார். 


20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து, 152 ரன்களை ஹைதராபாத் அணிக்கு இலக்காக நிர்ணயம் செய்தது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண