ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்று இருந்தால் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கும். இதனால் அந்தப் போட்டியில் பெரும் விறுவிறுப்பு இருந்தது. இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 159 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்காரணமாக பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் அந்தப் போட்டிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங்கின் போது டிம் டேவிட் தான் சந்தித்த முதல் பந்தை தொட்டது கேட்சாக மாறியது. எனினும் அதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இந்த முடிவிற்கு எதிராக டெல்லி அணி ரிவ்யூ எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் ரிஷப் பண்ட் ரிவ்யூ எடுக்கவில்லை. இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு ரிஷப் பண்ட், “அந்தப் பந்து எனக்கு பேட்டில் பட்டது போல் இருந்தது. ஆனால் அருகில் இருந்த வீரர்கள் இடம் கேட்ட போது அவர்கள் யாரும் சரியாக கூறவில்லை. இதன்காரணமாக நான் அந்த ரிவ்யூவை எடுக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
ரிஷப் பண்ட் ரிவ்யூ எடுக்காதது தொடர்பாக ரசிகர்கள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். டெல்லி அணி கடந்த மூன்று ஐபிஎல் தொடர்களிலும் டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இம்முறை அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்