Maxwell on Kohli: கேப்டன் பதவியில் விராட் கோலி இல்லாததால்.. மனம் திறந்த மேக்ஸ்வேல் !

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக விராட் கோலி 2013ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார்.

Continues below advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதன்காரணமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு உடன் உள்ளனர். இம்முறை 10 அணிகள் ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ளதால் ஐபிஎல் தொடருக்கு அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 

Continues below advertisement

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த அணிக்கு இம்முறை டூபிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி கடந்த தொடருடன் அப்பதவியிலிருந்து விலகினார். 

இந்தச் சூழலில் கோலி தொடர்பாக ஆர்சிபி அணியின் வீரர் மேக்ஸ்வேல் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், “கோலி தற்போது தன்னுடைய கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். என்னை பொறுத்தவரை அது அவருடைய ஆட்டத்தில் சில தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்காரணமாக அவர் தன்னுடைய ஆட்டத்தில் சில நெருக்கடியை சந்தித்தார். 

தற்போது எந்தவித நெருக்கடி மற்றும் சுமை இல்லாமல் அவர் சிறப்பாக ஆட முடியும். இது அவரை எதிர்த்து விளையாடும் அணிகளுக்கு பெரிய சவாலாக அமைந்துவிடும். முன்பு எல்லாம் விராட் கோலி பயங்கரமான ஆக்ரோசத்தை தன்னுடைய முகத்தில் காட்டி விளையாடுவார். ஆனால் தற்போது அது குறைந்துவிட்டது. அவருடைய உணர்ச்சி வெளிபாடுகள் சற்று குறைந்துள்ளன. ஆனால் ஆட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அவருக்கு எதிராக விளையாடும் அவரை பற்றி எனக்கு அதிகமாக தெரியவில்லை. ஆனால் அவருடன் இணைந்து விளையாடும் போது அவர் குறித்து பல விஷயங்கள் எனக்கு தெரியவந்தது. அவருடன் இணைந்து கிரிக்கெட் குறித்து விவாதம் செய்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று” எனத் தெரிவித்துள்ளார். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி முதலாவது ஐபிஎல் தொடர் முதல் தற்போது வரை விளையாடி வருகிறார். அவர் அந்த அணியின் கேப்டனாக 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement