ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் டூபிளசி 5 ரன்களில் மார்கோ ஜன்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் தொடர்ந்து ஆர்சிபி அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை இழந்தது. விராட் கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஆகிய மூன்று பேர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக சூர்ய பிரபுதேசாய் 15 ரன்கள் அடித்தார். இதனால் 16.1 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சன்ரைசரஸ் சார்பில் நடராஜன் மற்றும் மார்கோ ஜன்சன் தலா 3 விக்கெட் எடுத்து அசத்தினர்.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி அணி இதே நாளில் 49 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதன்பின்னர் இன்று நடைபெற்ற போட்டியில் 68 ரன்களில் ஆர்சிபி அணி அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகளில் குறைவான ஸ்கோர்கள்:
49 ஆர்சிபி vs கொல்கத்தா 2017
58 ராஜஸ்தான் ராயல்ஸ் vs ஆர்சிபி 2009
66 டெல்லி vs மும்பை 2017
67 டெல்லி vs பஞ்சாப் 2017
67 கொல்கத்தா vs மும்பை 2008
68 ஆர்சிபி vs சன்ரைசர்ஸ் 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்