ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. புனேவில் நடைபெறும் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த தொடர் தொடங்கியது முதலே ராஜஸ்தான் அணியும், பெங்களூர் அணியும் மிகவும் பலமான அணிகளாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்ட வீரர்களாக வந்த ஜோஸ் பட்லர், படிக்கல் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினர். அவர்களை அடுத்து, அஷ்வின் அவுட்டானார். இதனால் டாப் ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால், பவர்ப்ளே முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன், டேரில் மிட்சலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ரியான் பராக் மட்டும் ஆறுதல் தந்து ரன் சேர்த்தார். அவரது பொறுப்பான ஆட்டத்தால் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருக்கிறது ராஜஸ்தான் அணி. பெங்களூரு அணி பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, சிராஜ், ஹேசல்வுட், ஹசரங்கா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், ஹர்ஷல் பட்டேல் ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ஆர்.சி.பி. 8 போட்டிகளில் ஆடி 5 வெற்றி 3 தோல்வியுடன் உள்ளது. புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் ஆடி 5 போட்டியில் வெற்றி 2 தோல்விகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ப்ளே ஆப் வாய்ப்புக்கு அடுத்தடுத்த போட்டிகளில் பிரம்மாண்ட வெற்றியை பெறவே இரு அணிகளும் விரும்பும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் 10 போட்டியில் ராஜஸ்தான் அணியும், 13 போட்டியில் பெங்களூர் அணியும் மோதியுள்ளன. 2 போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. கடைசியாக ஆடிய 5 போட்டியிலும் பெங்களூர் அணியே வெற்றி பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்