ஐபிஎல் 2022 ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸால் (ஆர்ஆர்) எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கூல்டர்-நைல், காயம் காரணமாக சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியில் கூல்டர்-நைல் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். அன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்தநிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக கூல்டர்-நைல் இந்த சீசனில் ஒட்டுமொத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், அடுத்த ஆண்டு உங்களை மீண்டும் சந்திக்கிறோம். விரைவில் நீங்கள் காயத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் கவுல்டர்-நைல் என்று பதிவிட்டுள்ளனர். 


போட்டியின் போது, கூல்டர்-நைல் தனது நான்கு ஓவர்களைக் கூட முடிக்காமல் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர் களத்தில் இறங்கவில்லை, மேலும் RR இன் அடுத்த இரண்டு போட்டிகளில் அவருக்குப் பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டார். காயத்தின் தன்மை இன்னும் அறியப்படாத நிலையில், சீசனின் எஞ்சிய போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று உரிமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.






இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை (நேற்று) இரவு பெங்களூர் அணிக்கு எதிரான சீசனினுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது. பெங்களூர் அணியில் ஷாபாஸ் அகமது மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி பெங்களூர் அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர். 


ராஜஸ்தான் அணியின் வீரர்கள் விவரம் : 


சஞ்சு சாம்சன்(c), ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், கருண் நாயர், ரஸ்ஸி வான் டெர் டுசென், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷுபம் கர்வால், அனுனய் சிங், யுஸ்வேந்திரா சிங், யுஸ்வேந்திரா சிங், ஓபேட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், கே.சி. கரியப்பா, குல்தீப் சென், குல்தீப் யாதவ், தேஜஸ் பரோகா.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண