ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி ரியான் பராக்கின் அசத்தலான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்தது. ரியான் பராக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 


 


இதைத் தொடர்ந்து 145 ரன்கள் என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் டூபிளசிஸ் 23 ரன்களில் குல்தீப் சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் மேக்ஸ்வேல் முதல் பந்தில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 


 




ராஜாட் பட்டிதார் 16 ரன்களில் அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 10 ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்தது. பிரபுதேசாய் 2 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட தினேஷ் கார்த்தி 6 ரன்களில் ரன் அவுட்டாகி பெரும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 


 


அதன்பின்னர் ஆர்சிபி அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது. 19 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி 9 விக்கெட் இழப்பிற்கு 9 விக்கெட் இழந்திருந்தது. இறுதியில் 19.3 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆர்சிபி அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் நடப்புத் தொடரில் ஏற்கெனவே அடைந்திருந்த தோல்விக்கு ராஜஸ்தான் அணி பழிதீர்த்து கொண்டது. தற்போது 8 போட்டிகளில் விளையாடியுள்ளா ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. ஆர்சிபி அணி இன்று தன்னுடைய 4ஆவது தோல்வியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண