ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் பெர்ஸ்டோவ் அரைசதம் கடந்து அசத்தினார். இறுதியில் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜித்தேஷ் அசத்தினர். இதன்காரணமாக 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 189 ரன்கள் எடுத்தது. 


 


190 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பட்லர் அதிரடியான தொடக்கத்தை அளித்தார். அவர் 16 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 30 ரன்கள் அடித்திருந்தார். அப்போது ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


 


இதைத் தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் யசாஸ்வி ஜெயஷ்வால் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். சஞ்சு சாம்சன் 12 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசி 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்காரணமாக 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 95 ரன்கள் எடுத்தது. ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யசாஸ்வி ஜெயஷ்வால் அரைசதம் கடந்து அசத்தினார். 


 


அவர் 41 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகள் விளாசி 68 ரன்களுக்கு அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 15 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. கடைசி 30 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. 


அப்போது களத்தில் ஹெர்ட்மேயர் மற்றும் படிக்கல் இருந்தனர். இருவரும் ராஜஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஹெர்ட்மேயர் பவுண்டரிகள் மற்றும் சிக்சர் விளாசினார். இறுதியில் 19.4 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அசத்தியது. இதன்மூலம் ராஜஸ்தான் தன்னுடைய 7வது வெற்றியை பெற்றுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண