ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 88* ரன்கள் எடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. 


இந்நிலையில் 188 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் உத்தப்பா 1 ரன்னில் வெளியேறினார். அதன்பின்னர் வந்த மிட்சல் சாண்டனர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணியின் பந்துவீச்சின் போது 4ஆவது ஓவரை ரிஷி தவான் வீச வந்தார். அவர் அப்போது தன்னுடைய முகத்தில் ஒரு முகக்கவசம் போல் ஒன்றை அணிந்து இருந்தார். அது பந்துவீசும் போது பந்து வந்து முகத்தில் அடிக்காமல் இருக்க போட்டிருந்தார். ஐபிஎல் தொடரில் ரிஷி தவான் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கியுள்ளார். 


 






அவரின் முகக்கவசம் தொடர்பாக ரசிகர்கள் ட்விட்டரில் பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


 






 






 






 


இவ்வாறு பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண