ஐ.பி.எல். தொடரின் 28ஆவது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. மும்பையின் டிஓய் பட்டீல் மைதானத்தில் போட்டியில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. 


பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் காயம் காரணமாக விலகியநிலையில், அவருக்கு பதிலாக தற்காலிக கேப்டனாக அந்த அணியின் தொடக்க வீரர் தவான் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்தநிலையில், பஞ்சாப் அணிக்காக தலைமை வகிக்கும் 14 வது கேப்டன் என்ற பெருமையை தவான் பெற்றார். 






கடந்த ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல், லக்னோ அணியில் இணைந்து கேப்டனாக தற்போது செயல்பட்டு வருகிறார். இதன்காரணமாக கேஎல் ராகுலிடம் இருந்த கேப்டன் பதவி, மாயங்க் அகர்வால் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


இதுவரை நடந்த 15 சீசன் ஐபிஎல் தொடரில் 14 கேப்டன்களை பஞ்சாப் அணி மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஐபிஎல் தொடரில் அதிகமுறை கேப்டன் மாற்றிய பட்டியலில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. 


விவரம் : 


14 - PBKS*
12 - DC
  8 - SRH
  7 - MI 
  7 - RCB
  6 - RR
  6 - KKR
  3 - CSK
  1 - LSG
  1 - GT


இதுவரை பஞ்சாப் அணியில் கேப்டன்கள் விவரம் : 



  • யுவராஜ் (2008-09)

  • சங்கக்கரா (2010)

  • ஜெயவர்த்தனே (2010)

  • கில்கிறிஸ்ட் (2011-13)

  • டி ஹஸ்ஸி (2012-13)

  • ஜி பெய்லி (2014-15)

  • சேவாக் (2015)

  • மில்லர் (2016)

  • எம் விஜய் (2016)

  • ஜி மேக்ஸ்வெல் (2017)

  • ஆர் அஸ்வின் (2018-19)

  • கேஎல் ராகுல் (2020-21)

  • எம் அகர்வால் (2021-22)

  • தவான் (2022)*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண