15வது ஐ.பி.எல். தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  டெல்லி அணியைச் சேர்ந்த வீரர்கள் உள்பட 5 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி புனேவில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டிருந்தது. 


இந்நிலையில் தற்போது மேலும் டெல்லி அணியைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக இன்றைய ஐபிஎல் போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து இறுதி முடிவு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்று கருதப்படுகிறது. 


தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி டிம் சைஃபெர்ட்டிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஐபிஎல் போட்டி நடைபெற 12 வீரர்கள் தேவைப்படுகின்றன. ஒரு அணியால் 12 வீரர்களை களத்திற்கு கொண்டு வர முடியவில்லை என்றால் அந்தப் போட்டியை நடத்துவது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்யும். அந்தவகையில் தற்போது டெல்லி அணியில் 2 வீரர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. அவர்கள் தவிர மற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகாத பட்சத்தில் இன்றைய போட்டி நடைபெறும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 


 






முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் மிட்சல் மார்ஷிற்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தவிர சில டெல்லி அணியைச் சேர்ந்த சில நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. மொத்தமாக தற்போது வரை டெல்லி அணியைச் சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண