நடப்பு ஐபிஎல் தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகவும் மோசமான அமைந்திருந்தாலும் அந்த அணியில் ஒரு சில வீரர்களுக்கு இது நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. குறிப்பாக திலக் வர்மா, டிவால்ட் பிரேவிஸ், ஹிருதிக், கார்த்திகேய குமாரா ஆகியோருக்கு சிறப்பான தொடராக இத்தொடர் அமைந்து இருக்கிறது.
இந்நிலையில் நடப்புத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக கார்த்திகேய குமாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட உடன் அந்த அணியின் கடந்த போட்டியில் களமிறங்கினார். அதில் முதல் ஓவரிலேயே ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இந்தச் சூழலில் அவர் கடந்து வந்த கடினமான சூழல் தொடர்பாக அவருடைய பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு ஆங்கில கிரிக்கெட் தளத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், “கார்த்திகேய குமாரா 15 வயது இளம் சிறுவனாக டெல்லியில் உள்ள என்னுடைய அகாடமிக்கு வந்தார். அவரிடம் என்னுடைய அகாடமியில் சேர பணம் இல்லை. எனினும் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கலாம் என்று எனக்கு தோன்றியது. அதன்படி அவரை பந்துவீச அனுமதித்தேன். அவர் வீசிய பந்து மிகவும் சிறப்பானதாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அவரை என்னுடைய அகாடமியில் இணைந்தார்.
தன்னுடைய வாழ்க்கைக்காக அவர் இரவு நேரத்தில் அருகில் இருந்த ஒரு நிறுவனத்தின் வேலை செய்தார். அங்கு செல்வதற்கு நடந்து சென்று தினமும் தன்னிடம் வரும் பணத்தை சேமித்தார். அத்துடன் தினமும் அவர் ஒரு வருடத்திற்கு மேலாக மதிய உணவு சாப்பிடாமல் இருந்துள்ளார். அது எனக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தான் தெரியும். ஒருநாள் என்னுடைய அகாடமியில் அவருக்கு தங்கும் இடம் மற்றும் மதிய உணவு அளித்தேன். அப்போது அவர் உணர்ச்சி பொங்க தன்னுடைய துயரத்தை என்னிடம் பகிர்ந்தார்.
அப்போது அவர் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டிருந்தார் எனக்கு தெரிந்தது. தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்