நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் நடப்புத் தொடரில் முதல் முறையாக சென்னை தொடர்ச்சியாக முதல் 3 போட்டிகளில் தோல்வி சந்தித்தது. இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா திடீரென்று விலகியுள்ளார். இனிவரும் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக தோனி மீண்டும் செயல்பட உள்ளார். 


 


இந்நிலையில் நடப்புத் தொடரில் சென்னையின் கேப்டனாக ஜடேஜா சொதப்பியது என்னென்ன?


 


பந்துவீச்சாளரகள் தேர்வில் சொதப்பல்:


 


 நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் முதல் ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார். எப்போதும் சென்னை அணியின் பந்துவீச்சில் முதல் ஓவரை தீபக் சாஹர் வீசுவார். இம்முறை அவர் இல்லாத சூழலில் வேறு ஒரு அனுபவ வீரரை பந்துவீச வைத்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். அதேபோல் சென்னை-லக்னோ போட்டியில் ஆட்டத்தின் 19ஆவது ஓவரை சிவம் துபேவிற்கு கொடுக்கப்பட்டது. அந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்கும் ஜடேஜாவின் மோசமான பந்துவீச்சாளர் தேர்வு காரணமாக அமைந்தது. 





ஃபில்டிங்கில் சொதப்பில்:


இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த ஃபில்டர்களில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியின் சிறப்பான ஃபீல்டராக இவர் வலம் வந்தார். ஆனால் கேப்டன்சி வந்த பிறகு ஜடேஜா நடப்புத் தொடரில் ஃபீல்டிங்கிலும் சொதப்பி வருகிறார். குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா ஒரு முக்கியமான கேட்சை தவறவிட்டார். அதன்பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டிவால்ட் பிரேவிஸ் மற்றும் ஹிருதிக் சோகீன் கொடுத்த கேட்ச்களை அவர் தவறவிட்டார். இதுவும் கேப்டன்சி அவருடைய ஃபில்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நன்றாக நமக்கு காட்டுகின்றன.


 


மோசமான பந்துவீச்சு: 


நடப்பு ஐபிஎல் தொடரில் ஜடேஜாவின் பந்துவீச்சும் மிகவும் மோசமாக அமைந்துள்ளது. எப்போதும் ஜடேஜா பந்துவீச்சில் அணிக்கு சில முக்கியமான விக்கெட்களை எடுத்து தருவார். இந்த முறை தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் 5 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.  


 


பேட்டிங்கில் சொதப்பல்:


சென்னையின் முக்கிய ஆல்ரவுண்டராக இருக்கும் ஜடேஜா பேட்டிங்கில் அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பார். ஆனால் நடப்புத் தொடரில் கேப்டன் பொறுப்பு அவருடைய பேட்டிங்கிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்புத் தொடரில் அவர் தற்போது வரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் வெறும் 112 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மேலும் அதிகபட்சமாக ஒரே போட்டியில்  26 ரன்கள மட்டுமே அடித்துள்ளார். ஆகவே பந்துவீச்சு,பேட்டிங், ஃபில்டிங் என கேப்டனாக ஜடேஜா அனைத்து விஷயங்களிலும் சொதப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண