ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. 201 என்ற இலக்கை துரத்திய ஐதராபாத் அணி 189 ரன்கள் எடுத்து  13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


புள்ளிப்பட்டியலில் கடையில் இருக்கும் சென்னை அணி நேற்று தோனி தலைமையில் களம் இறங்கியது. டாஸ் வென்று முதல் பேட்டிங் தேர்வு செயத்து. 200 ரன்கள் எடுத்தது. க்வாளிவையர் சுற்று நுழைய வேண்டும் என்றால் நெட் ரன் ரேட் மிகவும் அவசியம். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் ஃபீல்டிங்க சொதப்பல், ட்ராப்ட் கேட்ச் என மிகச் சிறப்பாக சென்னை அணி விளையாடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.20-20 கிரிக்கெட் போட்டியில் எந்த நொடியிலும் ஆட்டம் தலைக்கிழாக மாறும். அப்படி,  பரபரப்பான ஆட்டத்தில் போட்டியின் இறுதி ஓவரும் மிகவும் முக்கியமானது. ஆட்டத்தின் இறுதி ஓவரை யாருக்கு வழங்கப்படுகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி, நேற்றைய ஆட்டத்தில் 3 ஓவர்களில் 22 ரன்கள் வழங்கி 3 விக்கெட்டுகளை எடுத்த முகேஷ் சவுரிக்கு இறுதி ஓவர் வீசும் வாய்ப்பை வழங்கினார் தோனி. ஆனால், இறுதி ஓவரில் மட்டும் 24 ரன்களை வழங்கினார். வழக்கமான இல்லாமல், நேற்றைய போட்டியில் அணி வீரர்களிடன் பேச வேண்டிய அவசியம் தோனிக்கு இருந்தது. அப்படி, முகேஷ் சவுத்ரி இறுதி ஓவரில் இரண்டாவது பந்து வீசிய பிறகு, தோனி முகேஷ் சவுத்ரியிடம் பேசினார்.


பரப்பரப்பான இறுதி ஓவரில் தோனி முகேஷ் சவுதிரியிடன் என்ன சொன்னா என்பது குறித்து போஸ்ட்-மேட்ச் பிரண்டேசன் நடந்தபோது பேசியுள்ளார்.


கிரிக்கெட் போட்டியில், பவர்பிளேயின் விக்கெட் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். என் ஓவரில் விக்கெட் இன்னும் விழவில்லை. நான் கேட்ச் மிஸ் செய்துவிட்டேன். வருதமாகதான் இருந்தது. ஆனால், என் பவுளிங் மூலம் அணிக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே, நான் விக்கெட்டும் எடுத்தேன். என்று முகேஷ் கூறினார்.






நேற்றைய போட்டியில், டவைன் பிராவோ அணியில் இல்லை. அது குறித்து கூறுகையில், இன்றைய போட்டியில் பிராவோ இல்லாததால், பவர்பிளேயில் சிறப்பாக பந்து வீசவேண்டிய பொறுப்பு அதிகமாக இருந்தது. ஏனெனில், பிராவோ அனுபவமிக்க வீரர். நான் களத்திற்கு வருவதற்கு முன்னரும், பிராவோ என்னிடம் கூறினார்,’ பவர்பிளேயில் சிறப்பாக பந்து வீசு. அணி உனக்குத் தேவையான ஆதரவை வழங்கும்.’ என்றார்.






சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதி ஓவர் பற்றி முகேஷ் சவுத்ரி, கூறுகையில், ” எனக்கு தோனி சிறப்பாக எந்த அறிவுரையும் வழங்கவில்லை. நல்ல லென்த் மற்றும் ஸ்டம் -டு- ஸ்டம் பந்து வீச வேண்டும் என்று மட்டுமே சொன்னார்.’ என்று தோனி தன்னிடம் பேசியது பற்றி கூறினார்.


மேலும் படிக்க..


சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை: எந்த அரசியல் அழுத்தமும் இல்லை - மாணவர் சங்கத்தினர் விளக்கம்