மகேந்திர சிங் தோனி எந்த முடிவு எடுத்தாலும் அது சிஎஸ்கேவின் நலனுக்காகவே இருக்கும் என்று சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி, தனது பதவியை ஜடேஜாவுக்கு விட்டுக்கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


கடந்த 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கமாக இருந்து வரும் ஜடேஜா, சிஎஸ்கேயை வழிநடத்தும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, தோனி வீரராக மட்டுமே களமிறங்குவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் 2வது முழுநேர கேப்டன் என்ற பெருமை ஜடேஜாவுக்கு கிடைத்துள்ளது.


இந்நிலையில், மகேந்திர சிங் தோனி எந்த முடிவு எடுத்தாலும் அது சிஎஸ்கேவின் நலனுக்காகவே இருக்கும் என்று சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி  காசி விஸ்வநாதன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.




இதுகுறித்துக் காசி விஸ்வநாதன் கூறும்போது, ''தோனியின் இந்த முடிவு மதிக்கப்பட வேண்டும். தோனி எந்த முடிவு எடுத்தாலும் அது சிஎஸ்கேவின் நலனுக்காகவே இருக்கும். ஒருவேளை அவர் இன்று இந்த முடிவை எடுப்பதற்கு சில காரணங்கள் இருக்கலாம், அவ்வளவுதான். அவரின் முடிவை ஏற்றுக் கொள்கிறோம் ''என்று தெரிவித்துள்ளார். 


ஐபிஎல் வரலாற்றில் எம்.எஸ்தோனி கேப்டனாக இதுவரை செய்த சாதனைகள்:


போட்டிகள் - 204
வெற்றி - 121
இழந்தது - 82
ஓய்வு இல்லை - 1
வெற்றி சதவீதம் - 59.60.


நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக முதல் போட்டியில் களமிறங்குகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண