ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே குஜராத் அணி அதிரடி காட்ட தொடங்கியது. குறிப்பாக விருத்திமான் சாஹா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 


 


மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த மேத்யூ வேட் ஒரு சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசி 13 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். அப்போது அவர் மேக்ஸ்வேல் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 


 






ஆட்டமிழந்த பிறகு பெவிலியன் திரும்பிய மேத்யூ வேட் மிகவும் கோபத்துடன் சென்றார். அவர் ஆத்திரத்தில் தன்னுடைய ஹெல்மேட்டை தூக்கி வீசினார். அத்துடன் தன்னுடைய பேட்டை கீழே அடித்தார். இது தொடர்பான சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


 






இந்த விக்கெட்டின் போது அவருடைய பேட்டில் பந்து பட்டது போல் தெரிந்தது. ஆனால் அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் அது சரியாக தெரியவில்லை. எனவே நடுவர் இவரை அவுட் என்று அறிவித்தார். அந்த கோபத்தில் மேத்யூ வேட் இதை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண