RR vs LSG Score Live : ராஜஸ்தானிடம் 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த லக்னோ..!

IPL RR vs LSG : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 10 Apr 2022 11:37 PM
ஸ்டோய்னிஸ் போராட்டம் வீண்..! 3 ரன்களில் தோற்ற லக்னோ...!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

12 பந்தில் 33 ரன்கள் தேவை...! வெல்லப்போவது யாரு?

லக்னோ அணி வெற்றி பெற கடைசி 12 பந்தில் 33 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் ஸ்டோய்னிஸ், ஆவேஷ்கான் உள்ளனர். 

16 பந்துகளில் 43 ரன்கள் தேவை...! வெற்றி பெற வைப்பாரா ஸ்டாய்னிஸ்..?

லக்னோ அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்த நிலையில் லக்னோ அணியின் வெற்றிக்கு 16 பந்துகளில் 43 ரன்கள் தேவைப்படுகிறது . களத்தில் ஸ்டாய்னிஸ் மற்றும் சமீரா உள்ளனர். 

ஹெட்மயர் அதிரடி...! லக்னோவிற்கு 166 ரன்கள் இலக்கு...!

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட்மயர் 59 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் 17 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள்..!

லக்னோ அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்துள்ளது. ஹெட்மயரும், அஸ்வினும் களத்தில் உள்ளனர்.

3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ராஜஸ்தான்...!

லக்னோ அணிக்கு எதிராக பேட் செய்து வரும் ராஜஸ்தான் அணி 9.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. அந்த அணியின் பட்லர் 13 ரன்களுக்கும், படிக்கல், 29 ரன்களுக்கும், கேப்டன் சஞ்சு சாம்சன் 13 ரன்ககளுக்கும் ஆட்டமிழந்தனர்.

ராஜஸ்தான் அணி 5 ஓவர்களில் 42 ரன்கள்...!

மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் லக்னோவிற்கு எதிராக பேட் செய்து வரும் ராஜஸ்தான் அணி 5 ஓவர்களில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது.  

Background

ஐ.பி.எல். தொடரின் 20வது ஆட்டத்தில் மும்பை, வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் இன்று நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், 5வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் களமிறங்குகின்றன. இரு அணிகளும் சரிசம பலத்தில் இருப்பதால் இந்த போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீசுவதாக கூறினார். இதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்ய உள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.