IPL LSG VS SRH LIVE SCORE :லக்னோவிடம் போராடி தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...!
IPL LSG vs SRH : மும்பையில் நடைபெறும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இடையேயான போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
லக்னோ அணிக்காக இலக்கை நோக்கி ஆடி வரும் சன்ரைசர்சின் வெற்றிக்கு 30 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் நிகோலஸ் பூரணும், வாஷிங்கடன் சுந்தரும் உள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் திரிபாதி 30 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்தநிலையில் குருணல் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், ஹைதராபாத் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
170 ரன்கள் இலக்குடன் ஆடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 48 பந்தில் 79 ரன்கள் தேவைப்படுகிறது.
ராகுல் திரிபாதிக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு அளித்துக் கெகாண்டிருந்த எய்டன் மார்க்ரம் குருணால் பாண்ட்யா பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து 12 ரன்களில் ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் அணி 10.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களுடன் ஆடி வருகிறது.
170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் சன்ரைசர்ஸ் அணியின் ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடி வருகிறார். எய்டன் மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ள அவர் பவுண்டரிகளாக விளாசி வருகிறார்.
லக்னோ அணி நிர்ணயித்துள்ள 170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் 16 ரன்களிலும், அபிஷேக் சர்மா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
கேப்டன் கே.எல்.ராகுல், தீபக்ஹூடா ஆகியோரின் அதிரடியால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.
சன்ரைசர்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான நடராஜன் வீசிய 19வது ஓவரில் கே.எல்.ராகுல் மற்றும் குருணால் பாண்ட்யா இருவரும் ஆட்டமிழந்தனர்.
லக்னோ அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய அற்புதமாக ஆடிய அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 19வது ஓவரில் நடராஜன் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி அவுட்டானர். அவர் 50 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 68 ரன்கள் விளாசினார்.
லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், தீபக்ஹூடா அதிரடியால் 17 ஓவர்களில் லக்னோ 137 ரன்களை எடுத்துள்ளது. எஞ்சிய 3 ஓவர்களில் அதிரடியாக ஆடி 160 ரன்களை கடக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ அணிக்காக அதிரடியாக ஆடிய தீபக் ஹூடா 33 பந்தில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் ரோமாரியா ஷெப்பர்ட் பந்தில் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
லக்னோ அணிக்காக அதிரடியாக ஆடி வரும் தீபக்ஹூடா 31 பந்துகளில் 50 ரன்களை எடுத்து அரைசதம் அடித்துள்ளார்.
லக்னோ அணிக்காக அதிரடியாக ஆடி வரும் தீபக்ஹூடா 31 பந்துகளில் 50 ரன்களை எடுத்து அரைசதம் அடித்துள்ளார்.
கே.எல்.ராகுலுடன் நிதானமாக ஆடி வந்த தீபக் ஹூடா அதிரடி ஆட்டத்திற்கு மாறியதால் லக்னோ அணியின் ஸ்கோர் மளமளவென ஏறியது. லக்னோ அணி 14 ஓவர்களில் 108 ரன்களுடன் ஆடி வருகிறது. கே.எல்.ராகுல் 36 பந்தில் 5 பவுண்டரியுடன் 47 ரன்களுடனும், தீபக் ஹூடா 29 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 48 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் லக்னோ அணி தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும், கே.எல்.ராகுல்- தீபக் ஹூடாவின் பொறுப்பான ஆட்டத்தால் 10 ஓவர்களில் 68 ரன்களை எட்டியுள்ளது.
லக்னோ அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் ஜோடி சேர்ந்துள்ள கே.எல்.ராகுல் - தீபக் ஹூடா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வருகின்றனர்.
சன்ரைசர்ஸ் அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் லக்னோ அணியின் முக்கிய வீரர் மணீஷ்பாண்டேவும் ரோமாரிய ஷெப்பர்ட் பந்தில் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
லக்னோ அணியின் தொடக்க வீரர் ஆட்டமிழந்து சிறிது நேரத்தில் மற்றொரு அதிரடி வீரர் எவின் லீவீஸ் 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். அவரும் 1 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி எல்.பி.டபுள்யூ ஆகி அவுட்டானர். தற்போது 4.1 ஓவர்களில் 21 ரன்களுடன் லக்னோ ஆடி வருகிறது.
ஹைதராபாத் அணியின் முக்கிய வீரரான நடராஜனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும், பர்த்டே பாயான நடராஜன் இன்று ஆட்டத்தில் திருப்புமுனையாக இருப்பாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Background
15வது ஐ.பி.எல். போட்டித்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.
2 போட்டியில் ஆடி 1ல் வெற்றி 1ல் தோல்வியுடன் உள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், 1 போட்டியில் ஆடி தோல்வியடைந்துள்ள சன்ரைசர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இந்த போட்டி மூலம் சன்ரைசர்ஸ் தனது வெற்றியை தொடங்குமா? அல்லது லக்னோவின் வெற்றி தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.மும்பையில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -