ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.


 


அதைத் தொடர்ந்து குயிண்டன் டி காக் மற்றும் தீபக்  ஹூடா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் 10 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக விளையாடி வந்த டிகாக் 37 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். 


 




அவரைத் தொடர்ந்து தீபக் ஹூடா 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகினார். இதன்காரணமாக லக்னோ அணி 14 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆயூஷ் பதோனி 4 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டையோனிஸ் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது ராகுல் சாஹர் பந்துவீச்சில் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 16 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. கடைசி 4 ஓவர்களில் லக்னோ அணி ஒரளவு ரன்களை சேர்த்து வலுவான ஸ்கோரை எட்டும் என்று கருதப்பட்டது. 


அப்போது களத்தில் இருந்த ஜேசன் ஹோல்டர் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்த போது 11 ரன்களில் அவர் ராகுல் சாஅர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மொஹ்ஷின் கான் மற்றும் துஷ்மந்தா சமீரா சிக்சர்கள் விளாசினர். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண