ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கே.எல்.ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட்டாகினார்.
இதைத் தொடர்ந்து குயிண்டன் டி காக் மற்றும் தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் 2வது விக்கெட்டிற்கு 71 ரன்கள் சேர்த்தனர். இதனால் லக்னோ அணி 7 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து 29 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசி 50 ரன்கள் எடுத்து டி காக் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த தீபக் ஹூடா 27 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது.
அப்போது களத்தில் இருந்த க்ரூணல் பாண்ட்யா அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 27 பந்துகளில் 25 ரன்கள் மட்டும் ஆட்டமிழந்தார். 16 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. லக்னோ அணி மிகவும் மந்தமாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், ஷிவம் மாவி வீசிய 19வது ஓவர் லக்னோ அணிக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
அந்த ஓவரில் முதல் மூன்று பந்தை மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிக்ஸருக்கு விளாசினார். அடுத்த பந்தில் அவுட் ஆனார். அவர் 14 பந்துகளில் 28 ரன்களுடன் வெளியேறினார். அதற்கு அடுத்து களமிறங்கிய ஹோல்டர் அந்த ஓவரில் எஞ்சியிருந்த 2 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார். இதனால், 150 ரன்களை கடக்குமா என்ற நிலையில் இருந்த லக்னோ அணி 170 ரன்களை கடந்தது. கடைசியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களை விளாசியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்