ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 143 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 16 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


 


இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஆட்டத்தின் 16வது ஓவரை முகமது ஷமி வீசினார். அந்த ஓவரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் எதிர்கொண்டார். அப்போது முதல் பந்தில் அவர் ஒரு இமாலய சிக்சர் விளாசினார். அது 117 மீட்டர் தூரம் சென்றது. இந்தச் சிக்சரை பார்த்த பலரும் மிகவும் அச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயாங்க் அகர்வால் ஆகியோர் மிகவும் வியப்படைந்தனர். 


 






மேலும் அந்த ஓவரில் லியாம் லிவிங்ஸ்டோன் 3 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசி 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடைய இந்த இமாலய சிக்சர் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட மிகவும் நீளமான சிக்சர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


 2022 ஐபிஎல் தொடரில் தற்போது வரை அடிக்கப்பட்ட நீளமான சிக்சர்கள்:


117 மீட்டர்- லியாம் லிவிங்ஸ்டோன்


114 மீட்டர் – டிவால்ட் பிரேவிஸ்


112 மீட்டர் – டிவால்ட் பிரேவிஸ்


108 மீட்டர்- லியாம் லிவிங்ஸ்டோன்


107 மீட்டர்– ஜோஸ் பட்லர்


106 மீட்டர்-லியாம் லிவிங்ஸ்டோன்


மேலும் ஐபிஎல் வரலாற்றில் தற்போது வரை அடிக்கப்பட்ட நீளமான சிக்சர்கள் பட்டியலில் லியாம் லிவிங்ஸ்டோன் 8ஆவது இடத்தை பிடித்துள்ளார். 


ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட நீளமான சிக்சர்கள்:


125 மீட்டர்- ஆல்பி மோர்கல்


124 மீட்டர் – பிரவீன் குமார்


122 மீட்டர் – ஆடெம் கில்கிறிஸ்ட்


120 மீட்டர் – ராபின் உத்தப்பா


119மீட்டர் – கிறிஸ் கெயில்


119 மீட்டர் – யுவராஜ் சிங்


119 மீட்டர் – ராஸ் டெய்லர்


117 மீட்டர் – லியாம் லிவிங்ஸ்டோன்  


117மீட்டர் – கவுதம் காம்பீர்


117மீட்டர்– பென் கட்டிங்


 


இந்திய வீரர்களில் மிகவும் நீளமான சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பிரவீன் குமார் தன் வசம் வைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ராபின் உத்தப்பா இந்தப் பட்டியலில் உள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண