ஐபிஎல் தொடரின் எட்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. 


போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே கேப்டன் மயாங்க் அகர்வால் எல்.பி.டபிள்யூவாகி வெளியேறினார். உமேஷ் யாதவின் இந்த அதிரடி ஓவரால் அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் நிதானமாக விளையாடினர். பனுகா ராஜபக்‌ஷேவை (31) தவிர மற்ற பேட்டர்கள் சோபிக்கவில்லை.


ஷிகர் தவான் 16 ரன்களுக்கும், லிவிங்ஸ்டன் 19 ரன்களுக்கும், ராஜ் பவா 11 ரன்களுக்கும் வெளியேற பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் சரிந்தது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஷாரூக்கான் டக்கவுட்டாக, ஹர்ப்ரதீர் பர் 14 ரன்களும், ரபாடா 25 ரன்களும் சேர்த்தனர். இதனால், 20 ஓவர்களை கூட முழுதாக விளையாடாத பஞ்சாப் அணி, 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்திருக்கிறது. கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை, உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும், சவுதி 2 விக்கெட்டுகளும், ஷிவம் மாவே, சுனில் நரைன், ரஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 






எளிதான இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா அணிக்கு, ஓப்பனர்கள் ரஹானே, வெங்கடேஷ் ஐயர் ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ், சாம் பில்லிங்ஸ் சிறப்பாக ஆட, 26 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்ரேயாஸ் அவுட்டானார். அவரை அடுத்து பேட்டிங் வந்த ரஸல் வெறியாட்டம் ஆடினார். 31 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 14.3 ஓவர்களில் இலக்கை எட்டி போட்டியை வென்றது கொல்கத்தா அணி. ஓவர்கள் அதிகம் மீதம் இருக்கையில் போட்டியை வென்றிருக்கும் கொல்கத்தா அணி, நல்ல ரன் ரேட்டுடன் ஐபிஎல் தரவரிசைப் பட்டியலில் இப்போது முதல் இடம் பிடித்திருக்கிறது.










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண