கடந்த வாரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. வான்கடே ஸ்டேடியத்தில் டெல்லி அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரன்-சேஸிங்கில், ராயல்ஸ் அணி டெல்லி அணியை 207/8 என்று கட்டுப்படுத்தியது.


கடைசி ஓவரில் டெல்லி அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டபோது ரோவ்மேன் பவல் சக மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வீரர் ஓபேட் மெக்காய் வீசிய முதல் மூன்று பந்துகளை தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் அடித்து நம்பிக்கை அளித்தார். 


அப்பொழுது, ஓபேட் மெக்காய் வீசிய மூன்றாவது பந்து நோ பால் என சர்ச்சை கிளம்பியது. அது நோபாலாக இருக்கும் என்று டெல்லி அணியின் வீரர்கள் அனைவரும் கேட்டனர். எனினும் நடுவர்கள் அதை நோபால் ஆக அறிவிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதற்கு அடுத்த பந்தை ரோவ்மேன் பவல் மிஸ் செய்தார். 






இந்தப் போட்டியில் அப்படி தான் அந்த மூன்றாவது பந்து இருந்தது. எனினும் அதை நடுவர்கள் நோபாலாக கொடுக்கவில்லை. இது டெல்லி வீரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் பிரவீன் அம்ரே மைதானத்திற்குள் உள்ளே வந்து நடுவர்களிடம் முறையிட்டார். இதனால் போட்டி முடிந்த பிறகு டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர், துணை பயிற்சியாளர் பிரவீன் அம்ரே ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 


இந்தநிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கும்பத்தினர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஹோட்டல் அறையில் ரிக்கி பாண்டிங் தனிமைப்படுத்தப்பட்டார். அந்த போட்டியில் பங்கேற்கவும் இல்லை. 


தற்போது, மீண்டும் அணிக்கு திரும்பிய ரிக்கி பாண்டிங் அன்றைய நாளில் நான் மிகவும் வெறுப்பாக இருந்தேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "இது வெறுப்பாக இருந்தது. நான் மூன்று அல்லது நான்கு ரிமோட் கண்ட்ரோல்களை உடைத்தேன் மற்றும் சில தண்ணீர் பாட்டில்கள் சுவர்களில் வீசப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.


அணிக்கு திரும்பிய ரிக்கிபாண்டிங் :


 



 


நீங்கள் ஒரு பயிற்சியாளராக இருக்கும்போது, களத்தில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் போது, அது மிகவும் கடினம், ஆனால் நீங்கள் உண்மையில் மைதானத்தில் இல்லாதபோது, அது இன்னும் கொஞ்சம் வெறுப்பை உண்டாக்கும் என்று தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண