ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டனஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சாஹா ஆகியோர் இணைந்து ஒரளவு அதிரடி காட்ட தொடங்கினர். 


 


6 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. விருத்திமான் சாஹா 25 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்ட்யா 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் தொடர்ச்சியாக தன்னுடைய 3ஆவது அரைசதத்தை அவர் பதிவு செய்தார். இதன்மூலம் கேப்டனாக தொடர்ச்சியாக 3 அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையையும் ஹர்திக் பாண்ட்யா பெற்றார். 


 




பாண்ட்யாவிற்கு ஆதரவாக இருந்து வந்த டேவிட் மில்லர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா 67 ரன்கள் எடுத்திருந்த போது சௌதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து வந்த ரஷீத் கான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனால் 18 ஓவர்களின் முடிவில் குஜராத் 140 ரன்கள் எடுத்தது. கடைசி 2 ஓவர்களில் குஜராத் அதிரடி காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கொல்கத்தா அணி சிறப்பான பந்துவீசியது. குறிப்பாக 20ஆவது ஓவரை வீசிய ரஸல் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதைத் தொடர்ந்து கடைசி இரண்டு பந்துகளிலும் விக்கெட் எடுத்தார். ஒரே ஓவரில் 5 ரன்கள் விட்டு கொடுத்து ரஸல் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 156 ரன்கள் எடுத்தது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண