ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து விராட் கோலி (58) மற்றும் பட்டிதார்(52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 20 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்தது. 


 


இதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் அதிரடி காட்டியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில் மற்றும் சாஹா அதிரடியாக பவுண்டரிகளை அடிக்க தொடங்கினர். முதல் 5 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்தது. விருத்திமான் சாஹா 22 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்திருந்த போது ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


 


அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 28 பந்துகளில் 28 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்காரணமாக 10 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. அப்போது களத்திலிருந்த குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 20 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 15 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. 


 


கடைசி 5 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 30 பந்துகளில் 58 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த மில்லர் மற்றும் ராகுல் திவாட்டியா அதிரடிய் ஆட்டத்தை தொடர்ந்தனர். 19.3 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண