IPL 2022: GT vs RR: ப்ளே ஆஃப் சுற்று போட்டி: முதல் அணியாய் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குஜராத் அணி

இன்றைய ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்ஸ்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்லர்ஸ் அணியும் இறுதிச்சுற்றுக்கு போட்டி போட இருக்கிறது.

கார்த்திகா ராஜேந்திரன் Last Updated: 25 May 2022 01:18 AM
கில்லர் மில்லர்!

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு நடைபெற்ற வீரர்கள் ஏலத்தின் முதல் சுற்றில் டேவிட் மில்லரை யாரும் வாங்கவில்லை. பின்பு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட இரண்டாவது சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணியை இறுதிப்போட்டிக்கு எடுத்துச் சென்று அசத்தி இருக்கிறார் மில்லர் கில்லர்.

ராஜஸ்தான் காலி, குஜராத் ஜாலி! உறுதியானது இறுதிப்போட்டிக்கான டிக்கெட்!

கடைசியில் 6 பந்துகளில்16 ரன்கள் தேவை என்றபோது அடுத்தடுத்து ஹாட்-ட்ரிக் சிக்சர்களை தெறிக்கவிட்டு இலக்கை எட்ட உதவினார் டேவிட் மில்லர்.

பாண்டியா - மில்லர் மிரட்டல் ஜோடி!

40 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியாவும், 68 ரன்கள் எடுத்து டேவிட் மில்லரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஓப்பனிங் சொதப்பல்

இலக்கை சேஸ் செய்த குஜராத் அணியில் ஆரம்பத்திலேயே விக்கெட் சரிந்தது. ஓப்பனர் கில் ரன் அவுட்டாகி வெளியேறினாலும், அடுத்து களமிறங்கிய மில்லர், கேப்டன் ஹர்திக் பாண்டியா அசத்தலாக ஆடினர்.

ராஜஸ்தான் 188 ரன்கள் குவிப்பு!

குஜராத் அணியைப் பொறுத்தவரை, ஷமி, யஷ் தயால், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருக்கிறது ராஜஸ்தான் அணி

சதம் மிஸ் செய்த பட்லர்

சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது, 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அநியாயமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

IPL 2022: GT vs RR: ப்ளே ஆஃப் சுற்று போட்டி: பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் 55/1
ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோர் களத்தில் உள்ளனர்
இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான் அணி!

யஷ் தயால் வீசிய ஓவரில், ஓப்பனர் யஷஸ்வி ஜேஸ்வால் அவுட்டாகி வெளியேறினார். இதனால், 11/1 என்ற நிலையில் ராஜஸ்தானுக்கு சொதப்பலான ஓப்பனிங்காக அமைந்திருக்கிறது.

Background

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான முதல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்க இருக்கிறது. முதல் பிளேப் ஆப் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அணிகள் மோதும். இன்றைய ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்ஸ்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்லர்ஸ் அணியும் இறுதிச்சுற்றுக்கு போட்டி போட இருக்கிறது. குலாஃபையர் 1- இல் (Qulaifier 1)வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்; தோல்வியடையும் அணி குவாலிஃபையர் 2ல் பங்கேற்கும். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.