ஐபிஎல் 2022 தொடருக்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில், ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. அதனை அடுத்து, வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை பிசிசிஐ உறுதி செய்திருக்கிறது.


2021 சீசன் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், 2022 சீசன் முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் அணிகள் 2022 ஐபிஎல் சீசனில் களமிறங்க உள்ளன. இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கெடுக்க வீரர்கள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். 


அந்த வரிசையில், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கெடுப்பதற்காக பதிவு செய்து வருகின்றனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், இந்த ஏலத்தில் பங்கெடுக்க விருப்பம் காட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.



ஏற்கனவே, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்திருந்த ஸ்ரீசாந்தை எந்த அணியும் வாங்கவில்லை. இம்முறை மீண்டும் அவர் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. கடைசியாக 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது பேசு பொருளான ‘மேட்ச் ஃபிக்சிங்’ புகாரில் சிக்கி, ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டார்.


38 வயதான ஸ்ரீசாந்த், 2020-2021 ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை தொடரில், கேரளாவுக்காக விளையாடிய அவர், 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க போராடும் ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு அளிக்க அணிகள் முன்வருமா என்பது சந்தேகமே.


கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாகவும் மற்றும் மூன்றாவது அலை பயம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ஒத்தி வைத்தது. அதனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 2022 ஐபிஎல் தொடரை வெளிநாட்டுக்கு மாற்றும் திட்டம் இல்லை எனவும், இந்தியாவிலேயே நடத்தப்படும் எனவும், போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இருக்காது எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் தகவல் கிடைத்திருக்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண