ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஷ்வால் சற்று அதிரடி காட்டினார். அவர் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தப் போது யஷ் தயால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


 


அடுத்த கேப்டன் சஞ்சு சாம்சன் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதனாமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேப்டன் சஞ்சு சாம்சன் 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 25 ரன்கள் எடுத்ததன் மூலம் டேவிட் வார்னரின் சாதனையை பட்லர் முறியடித்துள்ளார். 


 ஐபிஎல் வரலாற்றில் ஒரே தொடரில் 800 ரன்களுக்கு மேல் கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் பட்லர் படைத்துள்ளார். இதற்கு முன்பாக விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 800 ரன்களை கடந்து இருந்தனர். 


ஒரே ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்:


2016-விராட் கோலி- 973 ரன்கள்


2022-ஜோஸ் பட்லர்-858* ரன்கள்


2016-டேவிட் வார்னர்-848 ரன்கள்


2018-கேன் வில்லியம்சன் -735 ரன்கள்


2012-கிறிஸ் கெயில் - 733 ரன்கள் 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண